'செம போத ஆகாதே' ரிலீஸை தள்ளிவைத்த அதர்வா... உருவாகும் புதுக் குழப்பம்!
சென்னை : அதர்வா நடிப்பில் இந்த வாரம் மே 18-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட 'செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் மே 25-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படத்தின் தயாரிப்பாளர் அதர்வா அறிவித்துள்ளார்.
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் படம் 'செம போத ஆகாதே'. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மே 18-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு படத்தின் சில நிமிட காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'காளி' ஆகிய படங்கள் வெளியாவதை முன்னிட்டு வருகிற 25-ம் தேதிக்கு இந்தப்படத்தை தள்ளி வைத்துள்ளனர். இது பற்றி இன்று அதர்வா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"ரசிகர்களை என்டர்டெயின் செய்வதற்காக எல்லாப் படங்களும் கடினமான உழைப்பாலும், காதலாலும் உருவாக்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வசூல் ஒவ்வொரு படத்துக்கும் வரவேண்டும். முன்பே ரிலீஸுக்கு தயாரான படங்களுக்கு வழிவிட்டு எங்களின் 'செம போத ஆகாதே' படத்தை 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
எங்களுடன் துணையாக நின்ற தயாரிப்பாளர் சங்கம், மீடியா நண்பர்கள், ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்" என அந்த அறிக்கையில் ஹீரோவும், தயாரிப்பாளருமான அதர்வா தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரமே, ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'செம' படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஒரே மாதிரியான பெயரில் உருவாகியிருக்கும் இரு படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகவிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.


Click it and Unblock the Notifications











