நயனுடன் குத்துப்பாட்டு விஜய்சேதுபதியுடன் தான்... ஏமாற்றத்தில் அதர்வா!
பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை மறுக்கும் நயன் தாரா இளம் ஹீரோக்களுடன் நடிப்பதை மறுப்பதில்லை.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கும் நயன்தாரா, அடுத்து அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் நடிக்கிறார். இதில் அதர்வாவுக்கு ஜோடி இல்லையாம். ஒரு முக்கிய போலீஸ் அதிகாரி கேரக்டர்.
படத்தில் நயன் தாராவுக்கு ஒரு ஜோடியும், குத்துப்பாடலும் இருக்கிறதாம். அந்த கொடுப்பினை விஜய் சேதுபதிக்கு வாய்த்திருக்கிறது. கதையை முதலில் கேட்டு ஒப்புக்கொண்ட அதர்வாவுக்குதான் இதில் ஏமாற்றம்.

துப்பறியும் போலீஸுக்கு குத்துப்பாட்டா? தமிழ் சினிமா திருந்தவே திருந்தாதுப்பா!
Comments


Click it and Unblock the Notifications