அதர்வாவின் குருதி ஆட்டம் சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி வெளியானது!
சென்னை: நடிகர் அதர்வாவின் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம்
பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராதிகா சரத்குமார், ராதாரவி என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்
கடந்த வருடமே வெளியாக இருந்த இந்த திரைப்படம் கொரோனா சூழல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது குருதி ஆட்டம் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

ஆக்சன் ஹீரோவாக மாறி உள்ளார்
நடிகர் அதர்வாவின் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் தனி கவனத்தைப் பெற்று வரும் நிலையில் இதுவரை காதல் படங்களில் நடித்து லவ்வர் பாயாக வலம் வந்து கொண்டிருந்தவர் இப்போது ஆக்சன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஆக்சன் ஹீரோவாக மாறி உள்ளார். அந்த வகையில் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் 100 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்த அதர்வா அடுத்தடுத்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் திரைப்படங்களும் ஆக்ஷன் கதைகளில் உருவாகி வருகிறது.

கதாநாயகியாக பிரியா பவானி சங்கர்
நடிகர் வெற்றியின் அட்டகாசமான நடிப்பில் வெளியான 8 தோட்டாக்கள் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். கிராமத்து கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் குடும்பம் மற்றும் ஆக்சன் கதையில் உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் படு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ரிலீசுக்கு தயாராக இருந்தது
ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அணில் கிரிஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டே இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது. மேலும் குருதி ஆட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

டிசம்பர் 24ஆம் தேதி ரிலீஸ்
கொரோனா பரவல் காரணமாக சென்ற ஆண்டு வெளியாக இருந்த குருதி ஆட்டம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. அதன்படி குருதி ஆட்டம் படத்திற்கு யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











