அதர்வாவின் குருதி ஆட்டம் முக்கிய அப்டேட் வெளியானது!
சென்னை : நடிகர் அதர்வா இப்பொழுது தொடர்ந்து ஆக்ஷன் கதைகளில் நடித்து ஆக்ஷன் ஹீரோவாக மாறி வருகிறார்.
8 தோட்டாக்கள் பட இயக்குனருடன் முதல் முறையாக இணைந்து குருதி ஆட்டம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
அனைத்து கட்ட பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள குருதி ஆட்டம் படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

லவ்வர் பாயாக இருந்து ஆக்ஷன் அவதாரம்
நடிகர் அதர்வாவின் திரைப்படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெற்று வர இதுவரை லவ்வர் பாயாக வலம் வந்த அதர்வா இப்பொழுது தொடர்ந்து ஆக்ஷன் கதைகளில் நடித்து ஆக்ஷன் அவதாரம் எடுத்து வருகிறார் . அந்த வகையில் இப்பொழுது 8 தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இணைந்து குருதி ஆட்டம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

முதுகில் வெட்டுப்பட்ட அருவாளுடன்
பக்கா ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அதர்வா ரத்தம் சொட்டச் சொட்ட முதுகில் வெட்டுப்பட்ட கத்திகளுடன் போஸ் கொடுத்தது பார்க்கும் அனைவரையும் திகைக்க வைத்தது.

8 தோட்டாக்கள் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்
மேலும் இப்படத்தில் ராதாரவி மற்றும் ராதிகா என மூத்த நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர். ஏற்கனவே குருதி ஆட்டம் படத்திலிருந்து டீஸர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 8 தோட்டாக்கள் என்ற வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்தால் ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கி இருப்பதால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர்.

டைட்டில் டிராக் அக்டோபர் 19 ரிலீஸ்
இப்படத்தின் பணிகள் கடந்த 2018ம் ஆண்டே தொடங்கியது. இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள இப்படம் தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. விரைவில் ரிலீசாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்க ஏற்கனவே ரங்க ரட்டினம் என்ற மெலோடி பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் படக்குழு மற்றுமொரு புதிய அப்டேட்டை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் டைட்டில் டிராக் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











