அதர்வாவின் குருதி ஆட்டம்... 3வது சிங்கிள் வெளியானது!
சென்னை : நடிகர் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் குருதி ஆட்டம் படம் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தினை எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் பாடகி ஸ்வேதா மோகன் பிறந்தநாளையொட்டி அவரது குரலில் படத்தின் 3வது பாடல் வெளியாகியுள்ளது.

குருதி ஆட்டம் படம்
அதர்வா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம். படத்தில் ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்ரீ கணேஷ் இயக்கம்
எட்டுத் தோட்டாக்கள் படத்தின் மூலம் சிறப்பான கவனத்தை பெற்ற இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ராக்போர்ட் இன்டர்நேஷனல் சார்பில் முருகானந்தம் படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

3வது பாடல் வெளியீடு
இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது 3வது பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ள நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தாலாட்டும் மௌனம் பாடல்
தாலாட்டும் மௌனம் எனத் துவங்கும் இந்தப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. ஒரு பெண்ணின் காதல் உணர்வுகளை கூறும்வகையில் இந்தப் பாடல் உள்ளது. பாடல் வரிகளை கார்த்திக் நேத்ரா எழுதியுள்ளார். மெலடியாக உருவாகியுள்ள இந்தப் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது.

த்ரில்லர் படம்
த்ரில்லர் படமாக குருதி ஆட்டம் படம் உருவாகியுள்ளது. ஒரு விபத்தை சந்திக்கும் அதர்வாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. கொரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பில் பிரச்சினைகள் இருந்த நிலையில், அதை எதிர்கொண்டு தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் லுக்
படத்தின் பர்ஸ்ட் லுக் முன்னதாக வெளியான நிலையில், அதில் முதுகில் அதிகமான கத்திக்குத்துகளுடன் அதர்வா காணப்பட்டது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதேபோல ஒரு குழந்தையை முதுகில் சுமந்துக் கொண்டு அவர் காணப்படும் போஸ்டரும் வெளியானது. தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்துவரும் அதர்வாவிற்கு இந்தப் படம் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











