அடியாத்தி உன் வார்த்தை நிக்கும் நெஞ்சில் தேனாட்டம்.. அதர்வாவின் ரங்க ராட்டினம் பாட்டு எப்படி?

சென்னை: அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள குருதி ஆட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ரங்க ராட்டினம் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கி உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா பாட்டுன்னாலே ஹிட்டு தானே என்கிற ரீதியில் இந்த பாட்டும் சக்கைப் போடு போட்டு வருகிறது.

அதர்வா படம்

அதர்வா படம்

நடிகர் அதர்வாவுக்கு நிச்சயம் ஒரு நல்ல கம்பேக் படமாக குருதி ஆட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் ஸ்ரீகணேஷ் எழுதி இயக்கி உள்ள இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். ராக் ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

எளிமையான அழகு

எளிமையான அழகு

ராதிகா, ராதாரவி உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். டைட்டிலிலேயே வன்முறை இருப்பதால் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது. ஏகப்பட்ட இளம் ஹீரோக்களுடன் ஜோடிப் போட்டு நடித்து வரும் பிரியா பவானி சங்கர் இந்த படத்திலும் அழகு பொங்க நடித்துள்ளார்.

ரங்க ராட்டினம்

ரங்க ராட்டினம்

யுவன் சங்கர் ராஜா இசையில் யுகபாரதியின் வைர வரிகளில் 'சொடக்கு மேல' புகழ் அந்தோனி தாசன் இந்த பாடலை பாடியுள்ளார். குருதி ஆட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ரங்க ராட்டினம் யுவன் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களை மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்லோ பாய்சன்

யுவன் இசையில் பாடல் உருவானாலே ரசிகர்களுக்கு அது செம ட்ரீட் தான். அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கரின் காதல் காட்சிக்கு யுவன் போட்டுள்ள இந்த ரங்க ராட்டினம் பாடல் அப்படியே ரசிகர்களை ஆகாயத்திற்கு கொண்டு சென்று ஸ்லோ பாய்சனாக நெஞ்சுக்குள் இறங்கும் விதமாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X