எல்லாருக்கும் ஆதார் என்பது அட்ரஸ் எனக்கு அது வாழ்க்கை.. அதர்வா நடிப்பில் தெறிக்கும் அட்ரஸ் டீசர்!
சென்னை: இயக்குநர் ராஜமோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள அட்ரஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
கெளதம் மேனன் பின்னணி குரலில் நடிகர் அதர்வா அடித்து நொறுக்கும் உரிமை போராட்டமே அட்ரஸ் படத்தின் கதையாக அமைந்துள்ளது.

இசக்கி பரத் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நடிகர் அதர்வா நட்புக்காக நடித்திருந்தாலும், டீசர் முழுக்க அவரே நிறைந்திருக்கிறார்.
மலை வாழ் மக்களுக்கு மறுக்கப்படும் அத்தியாவசிய தேவைகளை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது டீசரை பார்த்தாலே புரிகிறது.
எங்க ஊருக்கு ரோடு வேணும்னா, என் ஊருக்கு கரன்ட் வேணும்னா, தண்ணி வேணும்னா, என் புள்ளைக்கு படிப்பு வேணும்னா உன்னை மண்டிப்போட்டு கும்பிடணும்ல என ஜிவிஎம் குரலில் கர்ஜிக்கும் வசனங்கள் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை கூட்டுகிறது.
நடிகர் ஆர்யா இந்த டீசரை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications