Actor Atharvaa: ஜெயம் ரவியை தொடர்ந்து அதர்வாவுடன் இணையும் எம் ராஜேஷ்.. ஹீரோயின் யாரு தெரியுமா?
சென்னை: நடிகர் ஜெயம் ரவி லீட் கேரக்டரில் நடித்து வரும் படம் பிரதர். இந்த படத்தை பிரபல இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கி வருகிறார். இவர்களது கூட்டணி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் காமெடி மட்டும் இல்லாமல் தன்னுடைய ஆரம்ப கால படங்களில் எம் ராஜேஷ் மேற்கொண்டு வந்த குடும்ப செண்டிமெண்ட்டையும் சிறப்பாக இணைத்துள்ளதாக தனது சமீபத்திய பேட்டியில் ஜெயம் ரவி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அந்த வகையில் பிரதர் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்தப்படம் கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே பிரதர் படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வாவுடன் எம் ராஜேஷ் இணையவுள்ளார். இந்த படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் படக்குழு சார்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டத்து யானை படத்தில் நடித்திருந்த நடிகர் அதர்வா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் அவரது ரீ என்ட்ரியாக ராஜேஷ் உடனான இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

இயக்குநர் எம் ராஜேஷ்: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து வித்தியாசமான ஜானர்களில் படங்களை கொடுத்து வருகிறார். காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதி இவரது நடிப்பில் சைரன் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை தொடர்ந்து கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார் ஜெயம் ரவி. அதில் எம் ராஜேஷுடன் இணைந்து அவர் நடித்துள்ள பிரதர் படமும் ஒன்று. எம் ராஜேஷூம் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார்.
அடுத்தடுத்த படங்கள்: எம் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் மை3 வெப் தொடர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் படம் கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் பிரதர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அதர்வா நடிப்பில் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி சங்கர் இணைய உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட உள்ளது. காதல், திருமணம், மற்றும் சமூகத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களத்தை எம் ராஜேஷ் உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தம்பியை தொடர்ந்து அண்ணன்: முன்னதாக அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியுடன் அதிதி சங்கர் நடித்து முடித்துள்ளார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ரொமாண்டிக் காதல் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அவரது அண்ணன் அதர்வாவுடன் அதிதி இணைய உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். இதனிடையே ராஜேஷ் இயக்கத்தில் தான் நடிப்பது குறித்து அதர்வா பெருமை தெரிவித்துள்ளார். என்டர்டெயின்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களுக்க இந்தப் படம் நிச்சயம் சிறப்பாக அமையும் என்று அதர்வா தெரிவித்துள்ளார்.
எம் ராஜேஷ் மகிழ்ச்சி: தொடர்ந்து படத்தின் இயக்குநர் எம் ராஜேஷும் இந்தப் படம் குறித்த தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் எப்போதும் என்டர்டெயின்மெண்ட் படங்களை கொண்டாடுவார்கள் என்று தெரிவித்துள்ள எம் ராஜேஷ், பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் இத்தகைய ஜானர்களில் தான் படங்களை இயக்குவது தனக்கு பெருமையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் கதைக்களம் ரசிக்கத்தக்க வகையில் பொழுதுப்போக்கு படமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications