சித்தப்பா டேனியல் பாலாஜி கால்மாட்டிலேயே கண்ணீருடன் நின்ற அதர்வா.. ஆளே இப்படி மாறிட்டாரே

சென்னை: அப்பாவை போலவே சித்தாப்பாவையும் சீக்கிரமே பறிகொடுத்த சோகத்தில் நடிகர் அதர்வா மற்றும் அவரது தம்பி ஆகாஷ் முரளி இருவரும் டேனியல் பாலாஜியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளன.

உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த டேனியல் பாலாஜி நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Atharvaa Murali and his brother Akash Murali attends Uncle Daniel Balaji funeral

கருப்பு நிற சட்டை, தாடி, கண்ணாடியுடன் ஆளே வித்தியாசமாக மாறிய தோற்றத்தில் நடிகர் அதர்வா தனது சித்தப்பா டேனியல் பாலாஜியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டார்.

46 வயதில் முரளி மரணம்: கடந்த 2010ம் ஆண்டு மே 19ம் தேதி 46 வயதிலேயே நடிகர் முரளி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. முரளியின் அம்மாவின் சகோதரி மகனான டேனியல் பாலாஜியும் தற்போது 48 வயதான நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சித்தப்பா கால்மாட்டில் அதர்வா: மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா பாணா காத்தாடி படத்தின் மூலம் 2010ம் ஆண்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அதர்வா கடைசியாக 2022ம் ஆண்டு வெளியான பட்டத்து அரசன் படத்தில் நடித்திருந்தார். அவர் நடிப்பில் உருவாகி உள்ள அட்ரஸ், தணல் மற்றும் நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. தனது சித்தப்பா டேனியல் பாலாஜி மறைந்த செய்தியை அறிந்ததும் தம்பியுடன் வந்த அதர்வா சித்தப்பா கால்மாட்டிலேயே வெகு நேரம் நின்று கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்திய காட்சிகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தின.

Atharvaa Murali and his brother Akash Murali attends Uncle Daniel Balaji funeral

ஆளே மாறிட்டாரே அதர்வா: அமுல்பேபி போல இருந்த அதர்வா பார்க்க ஆளே மாறிவிட்டார். தாடியெல்லாம் வைத்துக் கொண்டு கண்ணாடி அணிந்துக் கொண்டு சோகமே உருவாகி நிற்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். 34 வயதாகும் நடிகர் அதர்வா இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் சிங்கிளாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வாவின் தம்பி: அதர்வாவின் தம்பி ஆகாஷ் திருமணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அவரை ஹீரோவாக்க நினைத்த அதர்வா விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தம்பியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார். அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதர்வாவுடன் இணைந்து வந்த ஆகாஷ் மாஸ்க் அணிந்துக் கொண்டு அதர்வா அருகிலேயே நின்றுக் கொண்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X