இதயம் முரளியை முந்திய அதர்வாவின் இன்னொரு படம்.. DNA டிரைலர் மிரட்டுதா? உருட்டுதா?

சென்னை: ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பிக்பாஸ் ரித்விகா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள டிஎன்ஏ (DNA) திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. யூடியூபில் சற்றுமுன் டிரைலரும் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு அதர்வா 'நிறங்கள் மூன்று' படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என்று பார்த்த நிலையில், அவருக்கு அந்த படமும் காலை வாரி விட்டது. ஆனால், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீ லீலா நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Atharvaa Murali and Nimisha Sajayan s DNA Trailer is worth or Okay
Photo Credit:

அதர்வா நடிப்பில் கிட்டத்தட்ட அரை டஜன் படங்கள் உருவாகியுள்ள நிலையில், ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இதயம் முரளி படத்துக்கு முன்பாக டிஎன்ஏ படம் ரிலீஸ் ஆகிறது.

தனுஷுடன் மோதல்: 2010ம் ஆண்டு பானா காத்தாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அதர்வா பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக மாற போராடிக் கொண்டு தான் இருக்கிறார். இந்த ஆண்டு பொங்கலுக்கு அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக நேசிப்பாயா படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அவருக்கு அந்த படம் வெற்றியை தரவில்லை. இந்நிலையில், வரும் ஜூன் 20ம் தேதி தனுஷின் குபேரா படத்துடன் அதர்வா முரளி நடித்துள்ள டிஎன்ஏ படமும் வெளியாகிறது என்கிற அறிவிப்புடன் இன்று டிரைலர் வெளியாகி இருக்கிறது.

மீண்டும் நிமிஷா சஜயன்: சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மிஷன் சாப்டர் ஒன் உள்ளிட்ட தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்த நிமிஷா சஜயன் அதே வரிசையில் நடித்த படம் தான் டிஎன்ஏ. அந்த படங்களை போல இந்த படமும் தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா என பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை இயக்கி வரும் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திலும் நிமிஷா சஜயன் தனது குழந்தை குறித்து மருத்துவமனையில் போராடுவதும் அதற்காக ஹீரோ அதர்வா என்ன செய்கிறார் என்பதும் தான் கதையாக இருக்கும் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.

மிரட்டுதா? உருட்டுதா?: ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அவர் தயாரித்து இயக்கியுள்ள இதயம் முரளி படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு பதிலாக ரெட் ஜெயண்ட் வெளியீட்டில் தற்போது அதர்வாவின் டிஎன்ஏ திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு ஏதோ பிரச்னை இருப்பதாக மருத்துவர் அடுக்க, இந்த குழந்தை என்னுடைய குழந்தையே இல்லை என நிமிஷா சஜயன் வாதிடுவதும் தான் முக்கிய கதையாக இருக்கும் என தெரிகிறது. அதர்வா முரளிக்காக ஏகப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் திணிக்கப்பட்டு இருப்பது போல தெரிகிறது. நிமிஷா சஜயன் மட்டுமே நடிப்பில் தனித்து தெரிகிறார். சித்தா படம் போல சிறப்பான படமாக அமையுமா? அல்லது அதர்வா முரளி கம்பேக் கொடுக்க இன்னமும் வெயிட் பண்ண வேண்டுமா என்பது படம் வெளியானதும் தெரிந்துவிடும். டிரைலரை பொறுத்தவரையில் ஓகே ரகம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X