அதர்வாவின் 'இதயம் முரளி' படம் எப்படி இருக்கு? பொதுமக்களின் அனல் பறக்கும் விமர்சனம்!
சென்னை: மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, தனது தந்தையின் எவர்கிரீன் ஹிட் படமான 'இதயம்' படப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'இதயம் முரளி' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா மற்றும் கயாடு லோஹர் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தில், ஃபஹத் பாசில், நட்டி நட்ராஜ், தமன், பிரீத்தி முகுந்தன், சின்னி ஜெயந்த், 'பரிதாபங்கள்' சுதாகர், டிராவிட் செல்வம், ரக்ஷன் என பலர் நடித்துள்ளனர். இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தை நேரில் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் இதோ.
ரொம்ப நாள் கழித்து ஒரு ஃபீல் குட் மூவி: படம் பார்த்த ரசிகர் ஒருவர், படம் ரொம்ப நன்றாக இருந்தது. எந்த இடத்திலும் போர் அடிக்காமல் பேக்-டு-பேக் சுவாரசியமான காட்சிகளை வைத்துள்ளனர். ரொம்ப நாள் கழித்து ஒரு முழுமையான ஃபீல் குட் படம் பார்த்த திருப்தி கிடைத்துள்ளது. படத்தில் இரண்டு சண்டை காட்சிகள் மட்டுமே இருக்கின்றன, கதையின் பலமே காதலை அழகாகக் காட்டியிருப்பது தான். பழைய படத்தினுடைய சீக்வன்ஸ் அழகாகப் பொருந்திப் போகிறது. குறிப்பாக, ஃபஹத் பாசில் என்ட்ரி கொடுக்கும் காட்சி செம்ம சுவாரசியமாக இருந்தது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சி முழுவதும் காமெடியாக நகர்வது படத்திற்குப் பெரிய பிளஸ். தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ஒரு பெரிய திருப்தி கிடைக்கிறது என்றார்.

விட்ட இடத்தை பிடிக்கலாம்: மற்றொரு ரசிகர், படம் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்றாலும், மைல்டாக பார்க்கும்படி இருக்கிறது. படம் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது, அவ்வளவு நீளம் இந்த படத்திற்குத் தேவையில்லை; கொஞ்சம் எடிட்டிங்கில் நேரத்தைக் குறைத்திருக்கலாம். படத்தின் முதல் பாதி மெதுவாகச் சென்றாலும், இரண்டாம் பாதி வேகமாக நகர்கிறது. சில தேவையற்ற காட்சிகள் படத்தின் சுவாரசியத்தைக் கொஞ்சம் கெடுக்கின்றன. இருப்பினும், பழைய படங்களோடு ஒப்பிடும்போது இந்த படம் நன்றாகவே வந்துள்ளது. அதர்வா இதேபோன்ற ஃபீல் குட் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால், சினிமாவில் அவர் விட்ட இடத்தை எளிதில் பிடித்துவிடலாம் என்றார்.
நெகிழ்ந்த இளைஞர்கள்: படம் பார்த்த மற்றொரு இளைஞர், இந்த படத்தை 'இதயம் முரளி' என்று சொல்வதை விட 'இதயா முரளி' என்று சொன்னால் நன்றாக இருக்கும். 90ஸ் கிட்ஸ்களின் காதலை மிக நேர்த்தியாகத் திரைக்கதையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். எங்களால் தியேட்டர்களில் ஒரிஜினல் 'இதயம்' படத்தைப் பார்க்க முடியவில்லை. அந்த படத்தை யூடியூப் மற்றும் டிவிகளில் பார்த்து தான் அந்த காதலை உள்வாங்கினோம். அதை காதலை திரையில் பார்க்கும் போது, ஒரு நல்ல ஃபீலை கொடுக்கிறது. இந்த படம் நிச்சயம் இந்த காலத்து 2K இளைஞர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications