அதர்வாவின் குருதி ஆட்டத்தை பார்க்க தயாரா? இன்று ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை : நடிகர் அதர்வா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம்.
இந்தப் படத்தை எட்டு தோட்டக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று மாலை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

நடிகர் அதர்வா
நடிகர் அதர்வா சிறப்பான படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தனக்கு நடிக்கத் தெரியும் என்பதை உணர்த்தியுள்ளார். தற்போது குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப் போகாதே, அட்ரஸ் உள்ளிட்ட படங்களை தன்வசம் வைத்துள்ளார்.

குருதி ஆட்டம் படம்
குருதி ஆட்டம் படத்தை 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா
படத்தில் ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு விபத்தை சந்திக்கும் இளைஞனின் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படும் நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

வரவேற்பை பெற்ற போஸ்டர்கள்
படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. முதுகில் அதிகமான கத்திக் குத்துக்களுடன் நாயகன் காணப்படும் போஸ்டர் மற்றும் அதில் அவரது ஆக்ரோஷம் உள்ளிட்டவை முதல் போஸ்டரில் வெளியானது.

பாடல் வெளியீடு
தற்போது ரிலீசுக்கு இந்தப் படம் தயாராகிவரும் நிலையில் நேற்றைய தினம் படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. மெலடியாக உருவாகியுள்ள அந்தப் பாடல் ரசிகர்களை தாலாட்டியது. லிரிக் வீடியோவாக வெளியான நிலையில், அதன் காட்சிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிலீஸ் அறிவிப்பு
இந்நிலையில் இன்று மாலை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் தங்களது ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதத்தில் படம் வெளியாக உள்ள நிலையில் அனேகமாக 10ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











