Don't Miss!
- Sports
"நீங்களே இப்படி செய்யலாமா".. இந்திய மகளிர் அணி குறித்து கங்குலி போட்ட ட்வீட்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- News
மகாராஷ்டிரா, பீகார்.. அடுத்து புதுச்சேரி?பகீர் கிளப்பும் அரசியல் விமர்சகர்கள்..பாஜகவின் பிளான் என்ன?
- Finance
துவரம், உளுத்தம் பருப்பு விலை 15% உயர்வு.. நெல் சாகுபடி சரிவு..!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க பிரச்சனைனாவே ஓடி ஒழிஞ்சிப்பாங்களாம்... இவங்கள நம்பி சண்டைக்கு போகாதீங்க!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
Kuruthi Aattam Twitter Review: கில்லி விஜய் ரெஃபரன்ஸுன்னு சொல்லிட்டு படம் முழுக்க அஜித் இருக்காரே!
சென்னை: இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள குருதி ஆட்டம் இன்று வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் அதர்வா கபடி வீரராக நடித்துள்ளார். கபடி வீரர் என்றதுமே கில்லி விஜய் ரெஃபரன்ஸ் இருக்கு என நினைத்த விஜய் ரசிகர்களுக்கு தியேட்டரில் வேறமாறி ஷாக்கிங் காத்திருந்தது.
படத்தின் கிரெடிட்ஸில் அஜித்துக்கு நன்றி சொன்னது முதல் ஏகப்பட்ட இடங்களில் அஜித் ரெஃபரன்ஸை வைத்து அசத்தி இருக்கிறார் ஸ்ரீகணேஷ்.
“அஜித் கூட எப்ப படம் பண்ண போறீங்க..? விரைவில் சொல்றேன்…”: குருதி ஆட்டம் டைரக்டரோட அடுத்த ப்ளான்?

ரொம்ப லேட்
8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் நடிப்பில் இன்று வெளியாகி உள்ளது குருதி ஆட்டம். 2017ல் அறிவிக்கப்பட்டு, 2018ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் 2020ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீண்ட கால தாமதத்திற்கு பிறகு 2022 ஆகஸ்ட் 5ம் தேதி ஒரு வழியாக வெளியாகி விட்டது.

கபடி வீரர்
இந்த படத்தில் நடிகர் அதர்வா கபடி வீரராக நடித்துள்ளார். உலகம் முழுவதும் 500 ஸ்க்ரீன்களில் இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. கில்லி படத்தில் விஜய் கபடி வீரராக நடித்திருந்த நிலையில், குருதி ஆட்டம் படத்தில் விஜய் ரெஃபரன்ஸ் இருக்கும் என எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு படத்தில் பெரிய ஏமாற்றம் மிஞ்சியது. பதிலுக்கு, அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு படம் மாறி இருக்கிறது.

சுத்தமா முடியல
3பட தனுஷ் மனநிலை'ல இந்த படத்தோட Script Work பண்ணுன மாறி இருக்கு..
படத்துக்கு சுத்தமா செட் ஆகாத ஹீரோ படத்துக்கு தேவை இல்லாத ஹீரோயின் ரோல். மட்டமான ஸ்க்ரீன் பிளே மற்றும் எந்த Emotional Connect'யும் இல்லாத செட்டிமென்ட்டல் காட்சி. மொத்தத்தில்
#KuruthiAattam - முடியல என இந்த அஜித் ரசிகர்களே பங்கமாக விமர்சித்துள்ளார்.

இதுதான் கதை
முதல் பாதி ரொம்ப லெந்தா போற மாதிரி இருக்கு.. இண்டர்வெல் சீன் தெறியா இருக்கு. இரண்டாவது பாதி பழிவாங்கும் அதே பழைய ஃபார்முலா கதை தான். "நமக்கு புடிச்சவங்க தப்பு பண்ணா.. அந்த தப்பு முக்கியமா. இல்லை புடிச்சவங்க முக்கியமா?" இதுதான் கதை. எனக்கு இந்த படம் பர்சனலா புடிச்சிருக்கு என சொதப்பல்கள் இருந்தாலும் ஓகே சொல்லி இருக்கிறார் இந்த நெட்டிசன்.