திரையரங்குகளில் வெளியாகும் அதர்வாவின் 'தள்ளிப் போகாதே'

சென்னை : நடிகர் அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம் தள்ளிப் போகாதே.

ஆர். கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தள்ளிப் போகாதே படம்

தள்ளிப் போகாதே படம்

இயக்குநர் ஆர் கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தள்ளிப் போகாதே. அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் விஐபி புகழ் அமிதாஷ் பிரதான் நடித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அனுபமா மீண்டும் நடித்துள்ள தமிழ் படம் இது.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

தமிழில் ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ஆர் கண்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் நானி, நிவேதா தாமஸ் நடித்த நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்

14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்

இந்நிலையில் தெலுங்கில் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியை பெற்ற நின்னுக் கோரியின் தமிழ் பதிப்பான தள்ளிப் போகாதே படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

காதலை மையமாக கொண்ட படம்

காதலை மையமாக கொண்ட படம்

காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போன நிலையில் தற்போது இம்மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X