twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்கு பட ரீமேக்.. ஜனவரியில் வெளியாகிறது அதர்வாவின் 'தள்ளிப் போகாதே'.. படக்குழு தகவல்!

    By
    |

    சென்னை: அதர்வா நடித்துள்ள 'தள்ளிப் போகாதே' ஜனவரியில் வெளியாகிறது எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

    ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, பூமரங்க் உட்பட சில படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன்.

    இவர் இயக்கி சமீபத்தில் வெளியான படம், பிஸ்கோத். இதில் சந்தானம் ஹீரோவாக நடித்திருந்தார்.

    மாரடைப்பு காரணமாக.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடன இயக்குனர் டிஸ்சார்ஜ்! மாரடைப்பு காரணமாக.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடன இயக்குனர் டிஸ்சார்ஜ்!

    தள்ளிப் போகாதே

    தள்ளிப் போகாதே

    இதையடுத்து அவர் இயக்கியுள்ள படம் தள்ளிப் போகாதே. இதில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். அனுபா பரமேஸ்வரன், அமிதாஷ், ஆடுகளம் நரேன், காளிவெங்கட், உட்பட பலர் நடித்துள்ளனர். இது, தெலுங்கில் ஹிட்டான படம், நின்னு கோரி. படத்தின் தமிழ் ரீமேக். தெலுங்கில் நானி ஹீரோவாக நடித்திருந்தார்.

    தள்ளிப் போகாதே

    தள்ளிப் போகாதே

    'பூமராங்' படத்தை இயக்கிய பின் ஆர். கண்ணன் ஒரே நேரத்தில் பிஸ்கோத், தள்ளிப் போகாதே படங்களை இயக்கி வந்தார். கொரோனா காரணமாக, லாக்டவுன் பிறப்பிக்கப் பட்டதால், இந்தப் படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டதை அடுத்து, பிஸ்கோத் ரிலீஸ் ஆனது.

    மசாலா பிக்ஸ்

    மசாலா பிக்ஸ்

    இந்நிலையில், தள்ளிப் போகாதே படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குநர் கண்ணன். தற்போது இந்தப் படத்தை ஜனவரியில் ரிலீஸ் செய்ய இருக்கிறது. இதை அவருடைய தயாரிப்பு நிறுவனமான மசாலா பிக்ஸ் அறிவித்துள்ளது. இந்தப் படத்துக்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    அஜர்பைஜான்

    அஜர்பைஜான்

    கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் கதையின் ஒரு பகுதி வெளிநாட்டில் நடக்கிறது. இதற்காக ரஷ்யா அருகிலுள்ள அஜர்பைஜானில் கடும் பனிப்பொழிவில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. இந்த லொகேஷன் புதுமையாக இருக்கும் என்று இயக்குனர் கண்ணன் ஏற்கனவே கூறியிருந்தார்.

    English summary
    Thalli Pogathey, which stars Atharvaa and Anupama Parameswaran in lead roles, have announced that the film will release on January next year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X