DNA Box Office: பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் வரல.. அதர்வாவின் டிஎன்ஏ வசூல் இவ்ளோதானா?

சென்னை: நெல்சன் வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டிஎன்ஏ திரைப்படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. தனுஷின் குபேரா படத்துக்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், வசூலில் குபேரா படம் எங்கேயோ சென்று விட்டது. அதர்வாவின் டிஎன்ஏ திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை கூட பெரிதாக வசூலை ஈட்டாதது படக்குழுவை சற்றே வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகனான அதர்வா கடந்த 2010ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமந்தா, அமலா பால், வேதிகா, ஹன்சிகா என பல முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ளார்.

Atharvaa s DNA Day 3 Box Office Collection reports are here movie really needs a big speedup
Photo Credit:

கடந்த சில ஆண்டுகளாக பெரிய கம்பேக் கொடுக்க நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வரும் அதர்வாவுக்கு டிஎன்ஏ திரைப்படம் வெற்றிப் படம் என்றே பலரும் கூறி வருகின்றனர். டிராகன், டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன் படங்களை போல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களில் படத்தின் வசூல் எந்தளவுக்கு வந்துள்ளது என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

குபேரா தான் வின்னர்: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த வாரம் வெளியான குபேரா திரைப்படம் தான் அதர்வாவின் டிஎன்ஏ, அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் உள்ளிட்ட படங்களை விட பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை குபேரா ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று ஹைதராபாத்தில் சக்சஸ் மீட்டையும் படக்குழு நடத்தியுள்ளனர். கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், இந்தியளவில் 3 நாட்களில் 50 கோடி வசூலை குபேரா ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர். உலகளவில் 60 கோடிக்கும் மேல் வசூல் வந்திருக்கும் என்கின்றனர்.

டிஎன்ஏ 3 நாள் வசூல் எப்படி?: Sacknilk இணையதளம் அதர்வா நடிப்பில் வெளியான டிஎன்ஏ திரைப்படம் குபேரா படத்துடன் போட்டியாக வெளியான நிலையில், முதல் நாளில் 40 லட்சம் ரூபாய் வசூலை ஈட்டியதாகவும், அடுத்த நாள் 93 லட்சம் வரை வசூல் உயர்ந்துள்ளது என்றும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகபட்சமாக 1.04 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாக அறிவித்துள்ளது. இதுவரை 3 நாட்களில் வெறும் 2.37 கோடி ரூபாய் மட்டுமே அதர்வா படத்துக்கு வசூலாக வந்துள்ளது என்றும் இந்த வாரமும் படம் இதே வேகத்தில் சீராக ஓடினால் தான் 5 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளும் என்கின்றனர்.

ரொம்பவே குறைவு: டிஎன்ஏ திரைப்படம் சிறப்பாக உள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி இருந்தாலும், அதர்வா படத்தை தியேட்டர்களுக்குச் சென்று பார்க்க பெருவாரியான மக்கள் ஆர்வம் செலுத்தவில்லை என்றும் அதே நேரத்தில் தனுஷின் நடிப்பு குபேரா படத்தில் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள நிலையில், குபேரா படத்தை பார்க்கவே பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் தனுஷுக்கு குபேரா திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையை குவிக்கும் படமாக 2வது வாரத்தில் மாறிவிடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X