அத்திவரதா என் மகனுக்கு மணம் முடிக்க வரம் தா தா- மனம் உருகிய டி.ராஜேந்தர்

சென்னை: அத்திவரதா சிம்புவிற்கு ஏற்ற பொருத்தமான மணப்பெண்ணை கண்ணில் காட்டப்பா என்று காஞ்சிபுரத்திற்கு சென்று வேண்டிக்கொண்டுள்ளார் டி. ராஜேந்தர். தன் மகனின் மனதிற்கு பிடித்த பெண்ணை மணம் முடித்து வைக்க விரும்புகிறார் டி. ராஜேந்தர்.

இயக்குநர் டி. ராஜேந்தர் பன்முகத்திறமை கொண்டவர். அவரைப்போலவே அவரது மகன் சிம்புவும் குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமாகி இன்று நடிகர் மட்டுமல்லாது இசையமைப்பாளர், பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என பல கோணங்களில் தன்னை வெற்றிகரமாக நிரூபித்துள்ளார்.

பல வெற்றிகளைப் பெற்று உச்சத்திற்கு சென்றாலும் மகனுக்கு திருமணம் ஆகவில்லையே என்ற கவலை டி. ராஜேந்தருக்கு இருக்கத்தான் செய்கிறது.

குழந்தை நட்சத்திரம் சிம்பு

குழந்தை நட்சத்திரம் சிம்பு

தன் தந்தை டி.ராஜேந்தரனின் மைதிலி என்னை காதலி திரைப்படத்தில் ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதே அறிமுகமாகி பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர். இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதால் இளைஞர்களின் பேராதரவை பெற்றவர்.

உற்சாக மனிதர்

உற்சாக மனிதர்

சிம்பு மிகவும் உற்சாகமான கூல் மனிதர். சிம்புவிற்கு ரசிகைகள் கூட்டமும் அதிகம். பெண்களுக்கு அவர் இன்றும் ட்ரீம் பாய் தான். தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்துள்ளார். தனது தந்தையைப் போலவே பேச்சிலும் ரைமிங் கலந்திருப்பது அவருடைய ஸ்டைல். சிம்பு, சந்தானம் காம்பினேஷன் படு கிளாஸாக இருக்கும். மிகவும் வெளிப்படையாக இருப்பதால் பல சர்ச்சைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் ஆளானவர்.

தம்பிக்கு திருமணம்

தம்பிக்கு திருமணம்

அண்மையில் சிம்புவின் சகோதரர் குறளரசனின் திருமணம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இருப்பினும் மூத்தமகன் சிம்புவிற்கு இன்னும் திருமணம் ஆகாததை எண்ணி அவரது தந்தை டி.ராஜேந்தர் அவர்கள் மிகவும் மன வருத்தத்தில் உள்ளது அவரது பேச்சில் வெளிப்பட்டது.

மகனுக்கு பெண் பார்க்கணுமே

மகனுக்கு பெண் பார்க்கணுமே

அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், எனது மகனுக்கு நான் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பது ஒன்றும் கடினமான விஷயமில்லை. ஆனால் அவருக்கு ஏற்ற, பிடித்த, பொருத்தமான பெண்ணை தேர்ந்தேடுக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் தரிசனம்

அத்திவரதர் தரிசனம்

இந்நிலையில் சமீபத்தில் காஞ்சிபுரத்திற்கு விசிட் அடித்த டி.ராஜேந்தர் அங்குள்ள அத்தி வரதராஜப் பெருமாளை தரிசித்து, மனமுருக வேண்டிக்கொண்டார். அத்தி வரதரை தரிசித்துவிட்டு மனநிம்மதியுடன் வீட்டுக்கு திரும்பினார்.

அத்திவரதர் வரம் தருவார்

அத்திவரதர் வரம் தருவார்

இது பற்றி வெளிப்படையாக பேசிய அவர், 40 வருடங்களுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்தி வரதர் தான் என மகனுக்கு திருமணத்தை முடித்து தர வேண்டும் என்று காஞ்சிபுரத்திற்கு சென்று அத்திவரதரை தரிசனம் செய்து விட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். நிச்சயம் அந்த அத்திவரதரின் அருளோடு நம் சிம்புவை மணக்கோலத்தில் மிக விரைவில் காணலாம் என்று எதிர்பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X