அத்திப்பூக்கள் சீரியல் இயக்குநர் எடுக்கும் அகத்திணை திரைப்படம்

By Mayura Akilan

சன் டிவியில் அத்திப்பூக்கள் நெடுந்தொடரை இயக்கிய இயக்குநர் மருது, தற்போது அகத்திணை என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

சின்னத்திரையில் இருந்து மெட்டிஒலி திருமுருகனுக்குப்பின்னர் மற்றொரு இயக்குநர் பெரியதிரைக்கு இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் அகத்திணை. கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் நரேன்,ஜி.எம்.குமார், ஜார்ஜ், லொள்ளுசபா.மனோகர், சுவாமிநாதன், நளினி, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராமச்சந்திரன்,பிளாக்பாண்டி, பக்கோடா பாண்டி, சிவாநாராயணமூர்த்தி, அல்வாவாசு, மாஸ்டர்அதித்யா, செந்தில்குமார், பூவிதா, ரேவதி பாட்டி, செல்வி, ஹரிணி ஆகியோர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் T.R.ஸ்ரீகாந்த் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

Athipookal director enters silver screen

அத்திப்பூக்கள் டூ அகத்திணை

அகத்தினை படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் யு.பி.மருது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான 'அத்திப்பூக்கள்' என்ற தொடரை இயக்கியவர். அகிலன் ஒளிப்பதிவு செயும் இப்படத்திற்கு மரியா மனோகர் இசையமைக்கிறார்.

மக்கள் ஆதரவை நம்பி

படம் குறித்து இயக்குனர் மருது, "எனக்கு சின்னத் திரையில் அத்திப்பூகள் மூலமாக ஆதரவு கொடுத்த மக்கள் வெள்ளித் திரையில் 'அகத்திணை' படத்திற்கும் ஆதரவு கொடுப்பார்கள் என நம்பிக்கை இருக்கிறது.

ஒழுக்கமான காதல்

அகத்திணை என்பதற்கு ஒழுக்கமான காதல் என்று அர்த்தம். காதலுக்காக எதையும் தியாகம் செய்யலாம், காதலை தவிர என்பதை உணர்வு பூர்வமாக சொல்லக்கூடிய ஒழுக்கமான ஒரு காதல் கதை தான் இந்த 'அகத்திணை'.

சங்க இலக்கியத்தில்

பழந்தமிழ் இலக்கியத்தில் காதல் பற்றிய உணர்வுகளை அகத்திணையில் பாடப்பட்டுள்ளதால் கதைக்கு பொருத்தமாக இருக்குமென்று 'அகத்திணை' என்று பெயர் வைத்துள்ளோம்.

அப்பா - மகள் பாசம்

தன் மனைவியை இழந்த கணவன்...இனி வாழும் வாழ்க்கை தன் மகளுக்காக என ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னை அர்ப்பணித்து பாதுகாத்து பாசத்துடன் மகளை வளர்த்து வருகிறார். தந்தை மகள் பாசத்திற்கு இடையே தன் உயிரை காப்பாற்றிய நாயகன் மீது காதல் வயப்படுகிறாள் மகள்.

அப்பாவா?காதலனா?

தந்தை பாசம் ஒருபக்கம்...காதல் மறுபக்கம், காதலா, பாசமா என்று அவள் எடுக்கும் முடிவு, இறுதியில் என்ன விளைவை ஏற்படுத்தியது என்பது கதை." என்று தெரிவித்தார்.

விரைவில் வெள்ளித்திரையில்

படப்பிடிப்பு சென்னை, புதுக்கோட்டை, காரைக்குடி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X