அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.. திரைப்படமாகும் தடகள வீராங்கனை சாந்தியின் வாழ்க்கை!
சென்னை: தடகள வீராங்கனையான சாந்தியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. அவரது தந்தை சவுந்தர்ராஜன் தையல்காரர் ஆவார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வறுமையின் பிடியில் இருந்த சாந்தி, தனது தாத்தாவின் தூண்டுதலின் காரணமாக தடகள வீராங்கனையாக பயிற்சி பெற்றார்.

தமிழகத்தின் பெருமை
2006ம் ஆண்டு கத்தார் நாட்டின் தலைநகரம் தோகாவில் நடைபெற்றது ஆசிய விளையாட்டுப் போட்டி. இந்தியா சார்பில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட சாந்தி, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதனால் தமிழகத்தின் பெருமையானார் சாந்தி.

கவுரவித்த கருணாநிதி
சாந்தியின் இந்த வெற்றியை அவரது பெற்றோர் காண அவரது வீட்டில் டிவி இல்லை. தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சாந்திக்கு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி சாந்திக்கு டிவி மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி கவுரவப்படுத்தினார்.

வெள்ளிப் பதக்கம் பறிப்பு
ஆனால் சாந்திக்கு கிடைத்த கவுரமும் பாராட்டும் நீடிக்கவில்லை. அவரது பாலினம் குறித்து தவறான செய்திகள் வெளியாகின. இதனால் சாந்தி வென்ற வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டது.

கலங்க செய்த போட்டோ
இதனால் தன்னுடைய குக் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார் சாந்தி. உலக நாடுகளை உற்று நோக்க வைத்த சாந்தி, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் போட்டோக்கள் வெளியாகி பலரையும் கலங்க செய்தது.

சாந்தியின் பயோ பிக்
இந்நிலையில் சாந்தியின் வாழ்க்கையை பயோ பிக்காக எடுக்கவுள்ளார் அறிமுக இயக்குநர் ஜெயசீலன். அடிப்படையில் பாக்ஸரான ஜெயசீலன், சாந்தியின் பயோ பிக் படம் குறித்து பேசுகையில் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று பதக்கம் வென்று விட்டால் அவர்களின் வாழ்க்கை சிறப்பானதாகிவிடும்.

கொடூரமான திருப்பம்..
ஆனால் சாந்தியின் வாழ்க்கையில் அவர் பதக்கம் பெற்ற பிறகுதான் அவரது வாழ்க்கையே மோசமானதாக மாறிவிட்டது. ஒரு நபரின் வெற்றி ஒரு கொடூரமான திருப்பமாக இருந்ததுதான் சாந்தியின் பயோபிக்கை எடுக்க என்னை துண்டியது என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











