'அங்க இருந்துதான் எங்க காதல் தொடங்குச்சு..' சமீபத்தில் திருமணம் செய்த பிரபல நடிகை விளக்கம்!
சென்னை: தாங்கள் காதலில் விழுந்தது எப்படி என்று சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த படம், 'மனம் கொத்தி பறவை'. இதை எழில் இயக்கியிருந்தார்.
இந்தப் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஆத்மியா.

போங்கடி நீங்களும்
இதைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணனுடன், போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்தார். மலையாளத்தில் விஜய் சேதுபதி நடித்த மார்கோனி மத்தாய், சூப்பர் ஹிட்டான, ஜோசப் உட்பட சில படங்களில் நடித்தார். இப்போது அவனோவிலனோ, பிருத்விராஜின் கோல்ட் கேஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

வெள்ளை யானை
தமிழில், சுப்ரமணிய சிவா இயக்கத்தில், சமுத்திரகனியுடன் வெள்ளை யானை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, இவர் கொரோனா காலகட்டத்தில் கேரளாவில் கால்சென்டரில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்தார்.

சனூப் சம்மதம்
இந்நிலையில் இவருக்கு கண்ணூரைச் சேர்ந்த சனூப் என்பவருடன் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இதில் திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு பிறகு ஆத்மியா தொடர்ந்து நடிக்க, சனூப் சம்மதம் சொல்லி இருப்பதாகவும் அவர் தொடர்ந்து நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஒரே கல்லூரி
சனூப், கப்பலில் பணிபுரிகிறார். இது காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், இது காதல் திருமணம் என்று இப்போது தெரியவந்துள்ளது. இதுபற்றி ஆத்மியா கூறியிருப்பதாவது: நானும் சனூப்பும் ஒரே கல்லூரியில்தான் படித்தோம்.

வாழ்த்து மெசேஜ்
ஆனால், படிக்கும்போது நாங்கள் சந்தித்துக் கொண்டதில்லை. பின்னர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பார்த்தோம். பிறகு என்னுடைய முதல் படம் வெளியான பிறகு அவரிடம் இருந்து வாழ்த்து மெசேஜ் வந்தது. அப்போதிருந்து எங்கள் காதல் தொடங்கியது. கடந்த ஆண்டு, குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தோம்.

சினிமா இன்டஸ்ட்ரி
கொரோனா பரவல் அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. சனூப்பின் குடும்பம் சினிமா இன்டஸ்ட்ரி பற்றி அறிந்திருக்கிறார்கள். என்னுடைய நடிப்பை தொடர ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு நடிகை ஆத்மியா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











