சிலுக்கு சேலையில் மனதை அள்ளும் நடிகை அதுல்யா!

சென்னை : நடிகை அதுல்யா முதல் முறையாக சாந்தனு பாக்யராஜ்-க்கு முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

இனி கவர்ச்சி காட்டவும் தயார் என படங்களில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜொலி ஜொலிக்கும் சிலுக்கு சேலையில் மெய் மறக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்க பட்டுள்ளார்.

கவர்ச்சி காட்டாமல்

கவர்ச்சி காட்டாமல்

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை அதுல்யா மிக விரைவிலேயே முன்னணி நடிகையாக வலம்வர உள்ளார். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தவர் கடந்த சில படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

ரசிகர்களின் ஃபேவரைட்

ரசிகர்களின் ஃபேவரைட்

காதல் கண் கட்டுதே மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதன்பிறகு கதாநாயகன், நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்தசாட்டை என பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக ஆனார்.

முருங்கைக்காய் சிப்ஸ்

முருங்கைக்காய் சிப்ஸ்

ஜெய்யின் 25-வது திரைப்படமான கேப்மாரியில் நெருக்கமான காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து ஆச்சரியப்படுத்தி இருந்த அதுல்யா இப்பொழுது சாந்தனு பாக்யராஜ் ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் சென்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சாந்தனு உடன் இணைந்து தந்தை பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

தமிழ்நாட்டு style கச்சாயம் | Athulya Ravi's Kitchen | Quarantine
சிலுக்கு சேலையில்

சிலுக்கு சேலையில்

கலகலப்பான குடும்ப திரைப்படமாக முருங்கைக்காய் சிப்ஸ் உருவாகி இருக்க ஏதோ சொல்ல மற்றும் டாக்கு லெஸ் ஸு ஒர்க்கு மோரு என இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் சக்கைபோடு போட்டது. எப்போதும் சமூக வலைதளங்களில் அதுல்யா வெளியிடும் பல கவர்ச்சி ததும்பிய புகைப்படங்கள் வைரலாகி வரை இப்பொழுது ஜொலி ஜொலிக்கும் சிலுக்கு சேலையில் மனதை அள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார்.

More from Filmibeat

Read more about: அதுல்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X