இது கொரியன் பொண்ணு இல்லப்பா... நம்ம அதுல்யா.. கேண்டி டிரெஸ்ஸில் வைரலாகும் க்யூட் போட்டோஸ்!
சென்னை : நடிகை அதுல்யா இப்பொழுது சாந்தனு பாக்யராஜ் ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஏதோ சொல்ல, டாக்கு லெஸ்ஸு வொர்க்கு மோரு என இரண்டு பாடல்கள் வெளியாகி இணைய தளத்தில் சக்கை போடு போட்டு வருகிறது.
இந்த நிலையில் கேண்டி போல உள்ள டிரெஸ்ஸில் பார்க்க அச்சுஅசலாக கொரியன் போன மாதிரி இருக்கும் புகைப்படங்களை நடிகை அதுல்யா வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

சாந்தனு ஜோடியாக
மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகர் சாந்தனு பாக்யராஜ் இப்பொழுது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கலகலப்பான காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் சாந்தனு ஜோடியாக நடிகை அதுல்யா நடித்து வருகிறார்.

இரண்டு பாடல்களை
இதுவரை நண்பர்களாக இருந்த அதுல்யா மற்றும் சாந்தனு முதல் முறையாக ஆன்ஸ்கிரீனில் பேராக நடித்து வருகின்றனர். இதில் பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். லிப்ரா புரொடக்ஷன் தயாரித்து உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

டான்ஸில் பட்டையை கிளப்பி
இதில் முதல் பாடலாக ஏதோ சொல்ல ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியாகி இணையதளத்தில் பட்டையை கிளப்பியது. மனதை வருடும் இந்த ரொமான்டிக் பாடலை லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாடல் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாடல் டாக்கு லெஸ்ஸு வொக்கு மோரு வீடியோ பாடல் வெளியாகியது. இதில் அதுல்யா மற்றும் சாந்தனு போட்டி போட்டுக் கொண்டு டான்ஸில் பட்டையைக் கிளப்பி இருந்தார்கள்.

கேண்டி டிரெஸ்ஸில்
படப்பிடிப்பு முற்றிலும் முடிக்கப்பட்டு இப்பொழுது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது . படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதுல்யா பகிர்ந்து வருகிறார். இந்தவகையில் பாடலொன்றில் கேண்டி போல கலர் கலராக வண்ண உடையில் தொடை அழகு தெரிய பார்க்கவே வித்தியாசமாக அச்சு அசல் கொரியன் பெண் போல இருக்கும் அப்துல்யாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பார்பி கேர்ள் என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











