அய்யோ.. எம்பூட்டு அழகு.. ஆமா இதுல பொம்மை எது.. அதுல்யா எது.. ரொம்பத்தான் குறும்பு!
சென்னை : பொம்மைகளுக்கு நடுவே அதுல்யா புதிய போட்டோசூட்டை வெளியிட்டுள்ளார். அதில், தனது தம்பி எடுத்த போட்டோக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை அதுல்யா கடைசியாக நாடோடிகள் 2 படத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து அதுல்யா நடிக்கும் படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றன. இருந்தும் தனது இணைய ரசிகர்களை என்றும் விட்டுவிடாமல் காத்து வருகிறார் அதுல்யா என்றே சொல்லலாம் .

அதுல்யா காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அவர் நடித்த முதல் படத்திலே ஏதோ வடநாட்டு அழகி என்று ரசிகர்களால் தூரத்தில் வைத்து பார்க்காமல் பக்கத்து வீட்டு பெண்ணாக பார்க்கபட்டு கொண்டாடபட்டவரே அதுல்யா .
அதன்பின் இவர் நடித்த அத்தனை படங்களுமே பெரிய வெற்றியோ கவனத்தையோ ஈர்க்கவில்லை. ஏமாளி மற்றும் கேப்மாரி படங்களில் மார்டன் பெண்ணாக நடித்து தான் ஒரே மாதிரியான நடிகை இல்லை என்பதை ரசிகர்களுக்கு புரிய வைத்திருந்தார் .

அதுல்யாவிற்கு இன்ஸ்டாகிராமில் தற்போது 15லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சில பெரிய நடிகைகளுக்கு கூட இந்த அளவு ரசிகர்கள் இருந்தது கிடையாது. இருந்தும் அதுல்யாவிற்கு இருக்கும் மிக பெரிய இணைய ரசிகர்களின் ஆதரவும் அந்த ரசிகர்களுக்கு ஏற்றார்போல இணையத்தில் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருந்தும், அதுல்யாவால் சரியாக வெள்ளித்திரையில் பிரகாசிக்க முடியவில்லை என்றாலும், அவருக்கு தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி உள்ளன.
அதுல்யா தற்போது நெடுஞ்சாலையில் சாலையோரமாக இருக்கும் பொம்மை கடையிலும் அதன் அருகேயும் அமர்ந்து போட்டோக்களை எடுத்திருக்கிறார். தனது தம்பி எடுத்த போட்டோக்கள் என குறிப்பிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதனை பதிவேற்றியிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் அதுல்யாவின் அந்த போட்டோவிற்கு வழக்கம் போல கவிதை எழுதி கமெண்ட் செய்து வருகின்றனர் .

அதுல்யா அடுத்ததாக சிபிராஜுடன் வட்டம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆன்ட்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தை கமலகண்ணன் இயக்கி வருகிறார். வட்டம் படத்தை பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications