அதுல்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. மாஸ்டர் நடிகரின் அடுத்த படத்தில் கிடைச்சிருச்சு சான்ஸ்!

சென்னை: வானம் கொட்டட்டும், மாஸ்டர் என வரிசையாக நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் சாந்தனுவின் அடுத்த படத்தில் ஹீரோயினாக அதுல்யா ரவி இணைந்துள்ளார்.

கோவை பொண்ணான அதுல்யா ரவிக்கு, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் ஒரு போட்டோ போட்டாலே போதும், அதனை டிரெண்டிங்கில் கொண்டு வந்து வைரலாக்கி விடுகின்றனர்.

காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமான அதுல்யா, நாடோடிகள் 2, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் நடிகர்

மாஸ்டர் நடிகர்

நடிகர், இயக்குநர், இந்தியாவின் சிறந்த கதையாசிரியர் பாக்கியராஜின் மகனான சாந்தனுவுக்கு, தற்போது மாஸ்டர் நடிகர் என்ற மாஸான அங்கீகாரம் கிடைத்துள்ளது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற உள்ள நிலையில், சாந்தனுவின் அடுத்த பட பூஜை இன்று போடப்பட்டுள்ளது.

தந்தையுடன்

தந்தையுடன்

நடிகர் சாந்தனு, தனது தந்தை பாக்கியராஜ் நடிப்பில் வெளியான வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான சக்கரக்கட்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சாந்தனுவுக்கு பெரிய அளவில் படங்கள் அமையவில்லை. இந்நிலையில், தனது தந்தையுடன் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

அதுல்யாவுக்கு அதிர்ஷ்டம்

அதுல்யாவுக்கு அதிர்ஷ்டம்

காதல் கண்கட்டுதே படத்திற்கு பிறகு, நாடோடிகள் 2 மற்றும் கேப்மாரி படங்களில் செகண்ட் ஹீரோயினாக நடித்து வந்த அழகு பதுமை அதுல்யா ரவிக்கு, சாந்தனுவுடன் மெயின் ஹீரோயின் கிடைத்துள்ளது பெரிய அதிர்ஷ்டமாவே பார்க்கப்படுகிறது. கோலிவுட்டின் இந்த புதிய ஜோடிக்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்கும்.

புதுசா

புதுசா

சக்கரக்கட்டி, சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக என நடிகர் சாந்தனு நடித்த பல படங்கள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், தோல்விகளில் இருந்து கற்ற பாடங்களுடன், புது நடிகராக சமீபகாலமாக சாந்தனு வலம் வருகிறார். வானம் கொட்டட்டும் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சாந்தனு மாஸ்டர் படத்தில் எப்படி வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இன்னும் இருக்கு

இன்னும் இருக்கு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில், சாந்தனுவை மையப்படுத்தித் தான் கதையே நகரும் என்ற தகவல் கசிந்துள்ளது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, ராவண கூட்டம் மற்றும் சிம்பு தேவனின் கசட தபற உள்ளிட்ட படங்களிலும் வேற லெவல் நடிப்பை சாந்தனுவிடம் இருந்து பார்க்கலாம்.

புதுப்பட பூஜை

புதுப்பட பூஜை

இந்நிலையில், இன்று சாந்தனு, பாக்கியராஜ், அதுல்யா ரவி, யோகி பாபு, மதுமிதா, ரேஷ்மா, மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், பிரான்ஸ்டர் ராகுல் நடிப்பில் உருவாக உள்ள பெயரிடாத புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்திற்கு தரண் இசையமைக்கிறார். ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X