ரப்பர் மாதிரி உடம்பை வளைத்து உடற்பயிற்சி செய்யும் நடிகை அதுல்யா!
சென்னை : கோலிவுட்டில் மின்னல் வேகத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை அதுல்யா ரவி.
முருங்கைக்காய் சிப்ஸ்,வட்டம் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
க்யூட்டான நடிப்பு மட்டுமல்லாமல் உடற்பயிற்சியிலும் நாங்க கில்லி என சொல்லும் அளவிற்கு உடலை ரப்பர் போல அசால்டாக வளைத்து பயிற்சி செய்யும் வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

நட்பை கொண்டாடும்
சமுத்திரகனியின் இயக்கத்தில் நட்பை கொண்டாடும் நாடோடிகள் மிகப் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் சென்ற ஆண்டு வெளியாக அதில் கதாநாயகியாக நடிகை அதுல்யா நடித்திருந்தார். குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

ஒருதலை காதலியாக
ஜெய் தனது 25வது திரைப்படத்தை விஜய்யின் அப்பாவும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் தான் இயக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நின்று கேப்மாரி என்ற படத்தில் நடித்தும் முடித்தார். இதில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அதுல்யா நடித்ததோடு ஜெய்க்கு ஒருதலை காதலியாக நடித்து கவர்ச்சியை எக்குதப்பாக காட்டி இளசுகளை கிறங்க வைத்திருந்தார்.
Recommended Video

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில்
லிப்ரா புரொடக்ஷன் சார்பில் உருவாகி வரும் முருங்கைக்காய்ச் சிப்ஸ்ல் சாந்தனு பாக்யராஜ்க்கு ஜோடியாக நடித்துவரும் அதுல்யா ரவி இதைத்தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக சிபி சத்யராஜ் நடிக்க நடிகை ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அம்மாடியோவ்
இவ்வாரு அடுத்தடுத்த படங்களில் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் அதுல்யா உடற்பயிற்சி செய்து தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் மிகவும் கவனத்துடன் இருப்பவர். இந்த நிலையில் ஜிம்மில் உடலை ரப்பர் போல வில்லாக வளைத்து அசால்ட் செய்து இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்க அம்மாடியோவ் என ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











