தளதளக்கும் சேலையில் அதுல்யா.. எம்பூட்டு அழகு என வர்ணிக்கும் ரசிகர்கள்!
சென்னை : தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நடிகை அதுல்யா ரவி ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வர இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் அடல்ட் கண்டெண்ட் இருக்கும் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான "கேப்மாரி" திரைப்படத்தில் படு கிளாமரில் வந்து ரசிகர்களை உசுப்பேத்தி இருந்த அதுல்யா இப்பொழுது "முருங்கைக்காய் சிப்ஸ்" என்ற மற்றும் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார்.
ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின் போகப்போக கவர்ச்சி காட்டுவது ஹீரோயின்களின் இயல்பு என்ற போதும் அதுல்யா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் தளதளவென்று இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஊட்டியுள்ளார்.

நாடோடிகள் 2
காதல் கண் கட்டுதே, சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2, கேப்மாரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அதுல்யா ரவி.

அடல்ட் கண்டெண்ட்
கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட இவர் இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக கலக்கி வருகிறார். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அதுல்யா இப்பொழுது பல்வேறு கிளாமரான கதாபாத்திரங்களிலும் அடல்ட் கண்டெண்ட் திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

முதல் முறையாக
நடிகர் சாந்தனு உடன் இவர் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் "முருங்கைக்காய் சிப்ஸ்" திரைப்படம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டு வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் இதை தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.

எம்பூட்டு அழகா இருக்க
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு க்யூட்டான புகைப்படங்கள் அதுல்யா பதிவிட்டு வருவதை தொடர்ந்து இப்பொழுது தளதளவென சேலையில் தலை நிறைய மல்லிகைபூவுடன் தம்மாத்தூண்டு கவர்ச்சி காட்டியவாறு தனது செல்ல நாய் குட்டி உடனிருக்க அதை கொஞ்சிக்கொண்டு தனது கொஞ்சும் அழகின் மூலம் ரசிகர்களை சொக்க வைத்திருக்கும் இந்த சேலை போட்டோஷூட் "எம்பூட்டு அழகா இருக்க " என ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருவதோடு நடிகை மேகா ஆகாஷ் "அழகாய் இருக்கிறாய்" என கமெண்டில் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











