twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் ஃபேஸ்புக்கில் இல்லை… இது போலியானது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா ரவி !

    |

    சென்னை: நடிகை அதுல்யா எனது பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுட் தொடங்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

    அதிலிருந்து என் நண்பர்களுக்கு நான் அனுப்புவதுபோல குறுஞ்செய்தி அனுப்பி வருவதாக கூறியுள்ளார்.

    கொரோனா புதிய கட்டுப்பாடுகள்...தமிழகத்தில் நாளை முதல் தியேட்டர்கள் மூடல் கொரோனா புதிய கட்டுப்பாடுகள்...தமிழகத்தில் நாளை முதல் தியேட்டர்கள் மூடல்

    இதையாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    போலி கணக்கு

    போலி கணக்கு

    பிரபலங்கள் பெயரில் வலைத்தளங்களில் போலி கணக்குகள் உருவாக்கி, அவர்களை போல் செய்திகளை பகிர்வது தெரிந்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற நிகழ்வுகள் வாடிக்கையாகி விட்டன. சர்தேச அளவில் உலகெங்கிலும் உள்ள பிரபலங்களும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர்.

    போலி கணக்கு

    போலி கணக்கு

    இந்நிலையில், நடிகை அதுல்யா ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மர்ம நபர் ஒருவர் எனது பெயரில் போலி ஐடியை உருவாக்கி அதில், திரைத்துறை பிரபலங்களுக்கு நான் அனுப்புவது போல குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இது குறித்து எனது கவனத்திற்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து நான் புகார் தெரிவித்துள்ளேன். நான் ஃபேஸ்புக்கில் இல்லை என்பதை எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    போலி விளம்பரம்

    போலி விளம்பரம்

    இதற்கு முன்பு நடிகர் விஷ்ணு விஷால் குறித்து ஒரு போலி விளம்பரம் பரவியது. அதில் விஷ்ணு விஷால் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேவை என்று கூறப்பட்டிருந்தது. இதற்காக மக்களிடம் இருந்து பணத்தைப் பறித்து மோசடி செய்ய வாய்ப்பு உள்ளதால் இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி நடிகர் விஷ்ணு விஷால் கூறினார்.

    போலியானது

    போலியானது

    நடிகர் சத்தியராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ், கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் ஒரு விளம்பரம் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதில் நடிகர், நடிகைகள் தேவை எனவும், எனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இது தற்போது தான் என் கவனத்திற்கு வந்தது. இது போலியானது. இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, யாரும் நம்பாதீங்க, இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Athulya Ravi Warns about fake account on social media
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X