சூரிய அஸ்தமனத்தில் ஹரீஷ் கல்யாணுடன் உல்லாச படகுப்பயணம்.. அதுல்யாவோட வேற லெவல் வீடியோ!

சென்னை : ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது டீசல் படம்.

ஜிவி பிரகாஷ், சரத்குமார், யோகிபாபு, சுரபி உள்ளிட்டவர்கள் நடிப்பில் அடங்காதே என்ற படத்தை இயக்கிய சண்முகம் முத்துசாமி இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவந்த அடங்காதே படத்தின் சூட்டிங் நிறைவடைந்த போதிலும் படம் வெளியாகாமல் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முடங்கிய அடங்காதே படம்

முடங்கிய அடங்காதே படம்

ஜிவி பிரகாஷ், சுரபி, சரத்குமார், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் அடங்காதே. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த போதிலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இந்தப் படம் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் உள்ளது. இந்தப் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.

ஹரீஷ் கல்யாணின் டீசல் படம்

ஹரீஷ் கல்யாணின் டீசல் படம்

இதையடுத்து தற்போது ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி, இயக்குநர் அமீர், கருணாஸ், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் டீசல் என்ற படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க வடசென்னையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டது.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் துவங்கிய நிலையில், ஒரே கட்டமாக சூட்டிங்கை முடித்துவிட்டு விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை எஸ்பி சினிமாஸ் தயாரித்து வருகிறது.

ஹரீஷ் கையில் அரிவாள்

ஹரீஷ் கையில் அரிவாள்

இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்க 6 ஆண்டுகளை தான் எடுத்துக் கொண்டதாக சண்முகம் முத்துசாமி தெரிவித்துள்ளார். எப்போதும் ரோஜாப் பூவுடன் காதலையும் சேர்த்து கையில் எடுத்துக் கொண்டு சுற்றும் ஹரீஷ் கையில் அரிவாளை இந்தப் படத்தில் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடுக்கடலில் சூட்டிங்

நடுக்கடலில் சூட்டிங்

இந்நிலையில் இந்தப் படத்திற்காக நடுக்கடலில் எடுக்கப்பட்ட சூட்டிங்கில் ஹரீஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி பங்கேற்றனர். சூரிய அஸ்தமனத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வின் வீடியோவை அதுல்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகவும் ரொமாண்டிக்காக அந்த வீடியோ அமைந்துள்ளது.

ஆக்ஷன் அவதாரத்தில் ஹரீஷ்

ஆக்ஷன் அவதாரத்தில் ஹரீஷ்

ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட காதல் கதைகளில் மென்மையான கதாபாத்திரங்களில் நடித்துவந்த ஹரீஷ் கல்யாண், தற்போது இந்தப் படத்தின்மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். படத்தில் அதுல்யா ரவி வழக்கறிஞராக நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X