twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    37 ஏழை மாணவர்களுக்கு மருத்துவ பொறியியல் படிப்பு... சூர்யாவிடம் அட்லாண்டா தமிழர்கள் உறுதி!

    By Shankar
    |

    அட்லாண்டா(யு.எஸ்): அட்லாண்டாவில் நடைபெற்ற ஹார்வர்ட் தமிழ் இருக்கை - அகரம் அறக்கட்டளை நிதி திரட்டும் நிகழ்ச்சி மூலம் 24 ஏழை மாணவர்களுக்கான பொறியியல் / மருத்துவப் படிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்லாண்டா தமிழ்ச் சங்கம் செய்திருந்தார்கள்.

    நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, அகரம் அறக்கட்டளையின் மாணவர் சேர்க்கை பற்றி விவரித்தார். பெற்றோர்கள் கல்லூரி செல்லாதவர்களாக இருக்கும் முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்களுக்கே உதவி செய்வதாகவும், அதிலும் மின்சாரம், பேருந்து வசதி இல்லாத ஊர்களைச் சார்ந்த மாணவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

    Atlanta Tamils assure Surya for 37 poor students professional studies

    அகரம் அறக்கட்டளை மூலம் படித்து தற்போது நல்ல வேலையில் இருக்கும் பயனாளர்களின் பேட்டி ஒலிபரப்பப் பட்டது. மார்க்கெட்டிங் துறை, எஞ்சினியர்கள், ஐடி வல்லுனர்கள் உட்பட ஐந்து பயனாளர்கள் ஸ்கைப் மூலம் பார்வையாளர்களிடம் நேரடியாக உரையாடினார்கள். முன்னதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுடன், ராணுவத்தில் மருத்துவ அதிகாரியாக பணிபுரியும் பயனளார் உட்பட பலர் கலந்துரையாடி இருந்தனர்.

    சூர்யாவின் உரையைக் கேட்ட பார்வையாளர்கள், அகரம் அறக்கட்டளை மூலம் 24 மருத்துவ அல்லது பொறியியல் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்க முன் வந்தனர். ஒரு மாணவருக்கு தலா 7 ஆயிரம் டாலர் வீதம் கல்வித் தொகைக்காக அது செலவிடப்படும். தனி நபராகவும், மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் சேர்ந்தும் ஒரு மாணவர் என்ற அடிப்படையில், மொத்தம் 168 ஆயிரம் டாலர்களுக்கு உறுதி ஏற்றுக் கொண்டனர்.

    பின்னர், அட்லாண்டாவில் சூர்யா கலந்து கொண்ட தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சி மூலமாக, மேலும் 13 மருத்துவ / பொறியியல் மாணவர்களுக்கு நிதியுதவி கிடைத்துள்ளது. சூர்யாவின் வருகையினால், அட்லாண்டா தமிழர்களின் உதவியுடன் அகரம் அறக்கட்டளை மூலம் மொத்தம் 37 ஏழை மாணவர்களுக்கு மருத்துவ அல்லது பொறியியல் பட்டப்படிப்புக்கு நிதியுதவி கிடைத்துள்ளது..

    அட்லாண்டா தவிர நியூஜெர்ஸியிலும், சியாட்டலிலும் சூர்யாவின் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. செப்டம்பர் 16, 17ம் தேதிகளில் சான் ஃப்ரான்சிஸ்கோ, டல்லாஸ் ஆகிய நகரங்களிலும் சூர்யா பங்கேற்கும் அகரம் அறக்கட்டளை நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. சூர்யாவுடன் அகரம் அறக்கட்டளை நிர்வாகிகள்/தன்னார்வலர்கள் இருவரும் வருகை தந்துள்ளார்கள்.

    - இர தினகர்

    English summary
    Actor Surya participated in a fund raising event in Atlanta for Agaram Foundation. With this event 24 poor students are assured for professional education in Tamil Nadu. Additionally, with privately hosted dinner event 13 more students education expenses are sponsored by American Tamils in Atlanta.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X