Atlee Allu Arjun: அல்லு அர்ஜுன் - அட்லீ மீட்டிங் நடக்கவே இல்ல... மும்பையில் நடந்தது என்ன..?
சென்னை: ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் மாஸ் காட்டியுள்ளார் இயக்குநர் அட்லீ.
பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடியை தொட்ட ஜவான், அட்லீக்கு பெரிய கம்பேக் கொடுத்துள்ளது.
இதனால், அவர் அடுத்து அல்லு அர்ஜுனுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அட்லீ - அல்லு அர்ஜுன் இருவரும் மும்பையில் சந்தித்துக் கொண்டதாக சொல்லப்பட்ட நிலையில், அதுபற்றிய இன்னொரு அப்டேட் வெளியாகியுள்ளது.

அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணி..?: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் கொடுத்து அசத்தினார். இதனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் இருந்து அட்லீக்கு பெரிய ஆஃபர் கிடைத்தது. அதன்படி, ஷாருக்கான் - அட்லீ காம்போவில் உருவான ஜவான், இந்த மாதம் 7ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
பான் இந்தியா படமாக வெளியான ஜவான், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இதனால் அட்லீக்கு டாப் ஹீரோக்களிடம் இருந்து சூப்பரான ஆஃபர்கள் சென்றுள்ளன. அதேபோல், பெரிய பேனர்களும் அட்லீ இயக்கத்தில் படம் தயாரிக்க ரெடியாக உள்ளன. அதன்படி அட்லீயின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.
மேலும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்காக இயக்குநர் அட்லீ மும்பையில் வைத்து அல்லு அர்ஜுனை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து அட்லீ - அல்லு அர்ஜுன் காம்போ குறித்த அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அப்டேட் உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
அட்லீ மும்பை சென்றிருந்தது உண்மைதான் என்றாலும், அவர் அல்லு அர்ஜுனை சந்திக்கவில்லை என சொல்லப்படுகிறது. அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தான் சென்றார் என்றும், அங்கே அல்லு அர்ஜுனை சந்திக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. புஷ்பா 2ம் பாகத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தான் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.
அதேநேரம் அட்லீ அடுத்ததாக விஜய் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது தளபதி 68ல் கமிட்டாகியுள்ள விஜய், அதில் நடித்து முடிப்பதற்குள், அட்லீ ஸ்கிரிப்ட்டை முடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதனால், விஜய்யின் தளபதி 69 படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











