என்னங்க இது அட்லீக்கு வந்த சோதனை?.. அல்லு அர்ஜுனுடனான படம் ட்ராப்பா?

சென்னை: அட்லீ கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிஸியான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் நான்கு படங்களை இயக்கியிருக்கும் அவர் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மெர்சல் செய்தது. அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்குவதாக இருந்தது. இந்தச் சூழலில் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாகவும், அதற்கான காரணம் என்ற ஒரு தகவலும் பரவிவருகிறது.

குறும்படம் எடுத்து அதன் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இணைந்தார் அட்லீ. நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கரின் ஆஸ்தான சீடர்களில் ஒருவர். அதனையடுத்து ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். முதல் படமே மெகா ஹிட்டானது. படம் மௌனராகம் போல் இருந்தாலும் அட்லீயின் மேக்கிங் பரவலாக பேசப்பட்டது.

Atlee Allu Arjun


விஜய்யுடன் பயணம்: அதனைத் தொடர்ந்து தெறி படத்தை இயக்கினார். இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றினார். படம் சூப்பர் ஹிட்டானாலும் பல காட்சிகளும் ஏன் படமே சத்ரியன் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்காக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இதில் பிகில் படம் தோல்வியை சந்தித்தது.

ஹிந்தியில் அட்லீ: படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கிறார் அட்லீ என்ற விமர்சனம் எழுந்தாலும் அவர் இயக்கும் படங்கள் வசூலை அள்ளிவருகின்றன. ஷாருக்கனை வைத்து ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் அட்லீ. படத்துக்கு தமிழ்நாட்டில் மோசமான விமர்சனங்கள் கிடைத்தன. அதேசமயம் வட மாநிலங்களில் செம பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. இதன் காரணமாக மீண்டும் ஒரு படம் அட்லியூடன் செய்ய ஷாருக் திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர்: இதற்கிடையே ஹிந்தியில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியிருக்கிறார் அட்லீ. அதன்படி கீர்த்தி சுரேஷை வைத்து ஒரு படத்தை தயாரித்துவருவதாகவும்; கூறப்படுகிறது. அவரை சுற்றி எத்தனை விமர்சனங்களும் வந்தாலும் பக்கா கமர்ஷியல் இயக்குநர் என்பதை அவர் தனது முதல் படமான ராஜா ராணி படத்திலேயே நிரூபித்துவிட்டார். அதே ஃபார்முலாவைத்தான் தனது அடுத்தடுத்த படங்களிலும் கையாண்டுவருகிறார்.

அல்லு அர்ஜுன்: ஜவான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அட்லீ யாருடன் இணைவார் என்று கேள்வி எழுந்திருந்தது. அதனையடுத்து அவர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவிருப்பதாகவும் அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிம்றார் என்றும் கூறப்பட்டது. மேலும் முதன்முறையாக இரண்டு பேரும் இணையவிருக்கிறார்கள் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்தது.

ட்ராப்?: இந்நிலையில் அந்தப் படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தை ட்ராப் செய்துவிட்டார்கள் என்றும் அதற்கு காரணமாக ஒரு தகவலும் பரவுகிறது. அதாவது ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு அட்லீ தனது சம்பளட்த்தை ஏற்றியிருப்பதாக ஒரு பேச்சு ஓடியது. இந்தச் சூழலில் அல்லு அர்ஜுன் படத்துக்காக தனது சம்பளத்தை 40 கோடியிலிருந்து உயர்த்தி 60கோடியாக கொடுங்கள் கேட்டதாகவும், அதற்கு தயாரிப்பு தரப்பு ஒத்துவரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X