Cannes 2023 - கேன்ஸ் 2023 - மனைவியுடன் அசத்தல் என்ட்ரி கொடுத்த அட்லீ
சென்னை: cannes 2023 (கேன்ஸ் 2023) கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குநர் அட்லீ தனது மனைவி ப்ரியாவுடன் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லீ. ஷங்கரின் ஃபேவரைட் சீடர்களில் ஒருவர். அதனையடுத்து ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். முதல் படமே மெகா ஹிட்டானது. படம் மௌனராகம் போல் இருந்தாலும் அட்லீயின் மேக்கிங் பரவலாக பேசப்பட்டது.

விஜய்யுடன் பயண்:
அதனைத் தொடர்ந்து தெறி படத்தை இயக்கினார். இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றினார். படம் சூப்பர் ஹிட்டானாலும் பல காட்சிகளும் ஏன் படமே சத்ரியன் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்காக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இதில் பிகில் படம் தோல்வியை சந்தித்தது.
ஹிந்தியில் அட்லீ:
படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கிறார் அட்லீ என்ற விமர்சனம் எழுந்தாலும் அவர் இயக்கும் படங்கள் வசூலை அள்ளிவருகின்றன. தற்போது அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிவருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருக்கிறார். இந்தப் படமும் சில தமிழ் படங்களின் காப்பிதான் என இப்போதே பேச்சு எழுந்திருக்கிறது.
கேன்ஸில் அட்லீ:
இந்நிலையில் இயக்குநர் அட்லீ கேன்ஸ்ட் திரைப்பட விழாவில் தனது மனைவி ப்ரியாவுடன் கலந்துகொண்டார். ப்ரியா கறுப்பு நிற கவுனும், அட்லீ கறுப்பு நிற கோட் சூட்டும் அணிந்து அசத்தலாக என்ட்ரி கொடுத்தனர். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. முன்னதாக தமிழ்நாட்டிலிருந்து இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், ப்ரதீப் ரங்கநாதன், நடிகை குஷ்பூ உள்ளிட்டோ கேன்ஸ் 2023ல் கலந்துகொண்டனர்.

எப்போது நிறைவடைகிறது கேன்ஸ்:
ஆஸ்கர் விருதுகள் விழாவுக்கு பிறகு உயரிய விழாவாக கருதப்படும் கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 17ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த விழா நாளையுடன் (மார்ச் 27) முடிவடைகிறது. அனுராக் காஷ்யப் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்திருக்கும் கென்னடி திரைப்படம் நேற்று மிட்நைட் ஸ்க்ரீன்ங் பிரிவில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவருமே எழுந்து நின்று ஏழு நிமிடங்கள் கை தட்டி தங்களது பாராட்டை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜவான் எப்போது ரிலீஸ்:
முன்னதாக ஷாருக்கான், நயன் தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் அட்லீ இயக்கிவரும் ஜவான் படம் முதலில் ஜூன் மாதம் இரண்டாம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் பணிகள் முடிய தாமதமாகியிருப்பதால் அந்தப் படம் செப்டம்பர் ஏழாம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











