நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் பிரியா அட்லீ... விமர்சனத்திற்கு உள்ளாகும் அட்லீ!

சென்னை: இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பாலிவுட்டிலும் மோஸ்ட் வான்டட் இயக்குனராக மாறி இருக்கிறார். மும்பையில் மாஸ் காட்டி வரும் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் எடுத்திருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த ஷங்கரின் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. அவரிடம் கலை நுணுக்கங்களை கற்றுத் தெரிந்து அதன் பின் தானே படத்தை தயாரித்து தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து இன்று முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இவர் ஆர்யா, நயன்தாரா, ஜெய்யை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றியடைய பிறகு விஜய்யின் மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்தார்.

Atlee and Priya atlee couple photos trending on social media

ஷாருக்கானின் ஜவான்: தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பல வெற்றிகளை குவித்த அட்லீக்கு பாலிவுட் ஆசைவர, ஷாருக்கானை சந்தித்து கதை சொல்ல அவருக்கும் கதைபிடித்துவிட, பாலிவுட்டின் கிங் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.அட்லீ காப்பி எடுத்து படத்தை எடுக்கிறார் காப்பி இயக்குநர் என பல விமர்சனங்கள் வந்தாலும். அவர் இயக்கும் படத்திற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி காப்பி படம் தான் ஜவான் என்று சர்ச்சை எழுந்தாலும், படம் மாபெரும் ஹிட் அடித்து வசூலில் மிகப்பெரிய அளவில் கல்லா கட்டியதால் ஷாருக்கானுக்கு அட்லீயை மிகவும் பிடித்து விட்டது. எனவே ஜவான் படத்தை தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஷாருக்கான் முடிவெடுத்திருப்பதாகவும் விரைவில் இந்த கூட்டணி மீண்டும் இணைய போவதாகவும் செய்திகள் வெளிவருகிறது.

Atlee and Priya atlee couple photos trending on social media

பாலிவுட்டில் மாஸ்: ஜவான் படத்தின் மகத்தான வெற்றியால் பாலிவுட்டில் கடைவிரித்து இருக்கும் அட்லீ தற்போது தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இந்தியில் ரீமேக்காக உள்ள தெறி ரீமேக்கிற்கு அட்லீ தான் தயாரிப்பாளர் இவரது தயாரிப்பில் ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவத் தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றன. தெறி இந்தி ரீமேக்கிற்கு பேபி ஜான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காளீஸ் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் மே 31ந் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Atlee and Priya atlee couple photos trending on social media

காதல் திருமணம்: இயக்குநர் அட்லீ, முகப்புத்தகம் எனும் குறும்படத்தை எழுதியபோது அந்த படத்தின் ஹீரோயினாக நடித்த நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் பிரியா அட்லீ திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கினாலும், சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து வருவார்.

Atlee and Priya atlee couple photos trending on social media

எதுக்கு இதெல்லாம் அட்லீ: அவ்வப்போது, அட்லீயுடன் அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் பர்த்டே பார்ட்டி என தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் இவர்கள் இருவரும் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் டிரெண்டானது. தற்போது, அட்லீ தனது மனைவி பிரியாவுடன் செம ரொமான்ஸாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவில், பிரியா முன்னழகு தெரியும்படியும், தொடைஅழகை காட்டியும் போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த பேன்ஸ், நயன்தாராவிற்கே டஃப் கொடுப்பாங்க போல என்றும், எதுக்கு இந்த கவர்ச்சி என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X