நான் பிழை... நீ மழலை... மனைவியுடன் அட்லி ரொமான்ஸ் பதிவு!
சென்னை : இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக விளங்குபவர், இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் தான்.
Recommended Video
அட்லீ அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் Lion என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மும்பையில் நடந்து வந்தது.
இயக்குனர் அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் க்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அட்லி
சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோரை வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பெற்றார் அட்லி.

வெற்றித்திரைப்படம்
ராஜா ராணி வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். தெறி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து திரையில் தெறிக்கவிட்டு, வசூலைவாரிக்குவித்தது. இதைத் தொடர்ந்து, மெர்சல், பிகில் என அடுத்துத்து விஜய்யை வைத்து இயக்கினார்.

லயன்
தற்போது பாலிவுட்டில் தனது தடத்தை பதித்திருக்கும் அட்லி, ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து லயன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

காதல் திருமணம்
சிங்கம் படத்தில் அனுஷ்காவுக்கு தங்கையாக நடித்த பிரியாவை கடந்த 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை என்றாலும் அட்லி படம் தயாரிக்கும் இடங்களுக்கு எல்லாம் தனது மனைவியை தவறாமல் உடன் அழைத்துச் செல்கிறார்.

க்யூட் விடியோ
இணையபிரியாத நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் இந்த ஜோடி அவ்வப்போது இணையத்தில் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்வார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடு சென்ற இந்த ஜோடி, கடும் குளிருக்கு இதமாக ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து ஆட்டம்போடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும், இதற்கு தகுந்தவாரு காத்துவாக்குல ரெண்டு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான நான் பிழை... நீ மழலை பாடல் அழகாக இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த அட்லியின் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











