வாவ் செம க்யூட்.. அட்லீ - பிரியா மகனா இது.. எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க!
சென்னை: இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பாலிவுட்டிலும் மோஸ்ட் வான்டட் இயக்குனராக மாறி இருக்கிறார். மும்பையில் மாஸ் காட்டி வரும் அட்லீ தனது மனைவி பிரியா மற்றும் தனது குழந்தையுடன் எடுத்திருக்கும் போட்டோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரம்மாண் இயக்குனர் என பெயர் எடுத்த ஷங்கரின் நண்பன், எந்திரன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. அவரிடம் பல விஷயத்தை கற்றுத் தெரிந்து அதன் பின் தானே படத்தை தயாரித்து தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து இன்று முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் அட்லீ. இவர் ஆர்யா,நயன்தாரா, ஜெய்யை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றியடைய பிறகு விஜய்யின் மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்தார்.

ஜவான்: தமிழ் சினிமாவின் தொடர்ச்சியாக பல வெற்றிகளை குவித்த அட்லீக்கு பாலிவுட் ஆசைவர, ஷாருக்கானை சந்தித்து கதை சொல்ல அவருக்கும் கதைபிடித்துவிட, பாலிவுட்டின் கிங் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினா. அட்லீ காப்பி எடுத்து படத்தை எடுக்கிறார் காப்பி இயக்குநர் என பல விமர்சனங்கள் வந்தாலும். அவர் இயக்கும் படத்திற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.அப்படி காப்பி படம் தான் ஜவான் என்று சர்ச்சை எழுந்தாலும், படம் மாபெரும் ஹிட் அடித்து ஆயிரம் கோடியை வசூலில் மிகப்பெரிய அளவில் கல்லா கட்டியதால் ஷாருக்கானுக்கு அட்லீயை மிகவும் பிடித்து விட்டது.
பாலிவுட்டில் மாஸ்: ஜவான் படத்தின் மகத்தான வெற்றியால் பாலிவுட்டில் கடைவிரித்து இருக்கும் அட்லீ தற்போது தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.இந்தியில் ரீமேக்காக உள்ள தெறி ரீமேக்கிற்கு அட்லீ தான் தயாரிப்பாளர் இவரது தயாரிப்பில் ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவத் தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றன. தெறி இந்தி ரீமேக்கிற்கு பேபி ஜான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காளீஸ் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
காதல் மனைவி: இயக்குநர் அட்லீ, முகப்புத்தகம் எனும் குறும்படத்தை எழுதியபோது அந்த படத்தின் ஹீரோயினாக நடித்த நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது குழந்தைக்கு மீர் என பெயர்வைத்துள்ளனர். தற்போது அட்லீ, மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் வாவ் செம க்யூட் என்றும், மகன் வளர்ந்துவிட்டார் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











