அட்லிக்கு அடித்தது ஜாக்பாட்.. லேட் பண்ண ஹிரானி.. சட்டென மனம் மாறிய ஷாருக்கான்.. ஆகஸ்ட்டில் ஆரம்பம்!

சென்னை: பிகில் படத்திற்கு பிறகு பண்ணா பாலிவுட் படம் தான் பண்ணுவேன் என மும்பைக்கு கிளம்பிய இயக்குநர் அட்லிக்கு ஒரு வழியாக ஒகே சொல்லி விட்டாராம் ஷாருக்கான்.

பிகில் படத்திலேயே ஷாருக்கான் என்ட்ரி இருக்கும் என ஏகப்பட்ட ரூமர்கள் பரவின.

மேலும், படத்திற்கு 'சங்கி' என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

300 கோடி வசூல்

300 கோடி வசூல்

தளபதி விஜய் மற்றும் இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. கடந்த 2019ம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்ட, பாலிவுட் நடிகர்களின் பார்வை இயக்குநர் அட்லி மீது விழுந்தது.

ஷாருக்கான் படம்

ஷாருக்கான் படம்

இயக்குநர் அட்லியின் கதையை கேட்ட உடனே ஷாருக்கானுக்கு பிடித்துப் போய் ஓகே சொல்லிவிட்டார். பிகில் படத்தை முடித்த கையோடு ஷாருக்கான் படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக தீவிர பணிகளில் ஈடுபட தொடங்கினார் அட்லி. தமிழில் அதற்கு அடுத்து புதிதாக எந்தவொரு படத்திலும் அவர் கமீட் ஆகவில்லை.

பதான் படத்தில் பிசி

பதான் படத்தில் பிசி

ஜீரோ படத்தின் தோல்விக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய படங்கள் எதையும் ஓகே பண்ணாத ஷாருக்கான், அட்லியுடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாலிவுட்டில் ஹிரித்திக் ரோஷனின் வார் படத்தை இயக்கி 400 கோடி வசூல் ஈட்டிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் பிசியாகி விட்டார்.

அடுத்த படமும் இல்லை

அடுத்த படமும் இல்லை

அதுமட்டுமின்றி, பதான் படத்தைத் தொடர்ந்து 3 இடியட்ஸ், பிகே உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் படத்திலும் நடிக்க கமீட் ஆனார் ஷாருக்கான். அதனால், இயக்குநர் அட்லி மற்றும் ஷாருக்கான் கூட்டணி இணைய இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.

கதையில் மாற்றம்

கதையில் மாற்றம்

இந்நிலையில், தற்போது இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் கதையில் பெரிய மாற்றத்தை உருவாக்க உள்ளதால், படம் தொடங்க மேலும், சில கால தாமதம் ஆகும் என்பதை அறிந்து கொண்ட ஷாருக்கான், உடனடியாக அட்லி இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாக தற்போது சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் மாதம்

பதான் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Atlee என்ற ஹாஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் வருவாரா

விஜய் வருவாரா

மேலும், டபுள் ஆக்‌ஷன் ரோலில் ஷாருக்கான் நடிக்கவுள்ள அந்த புதிய படத்தில் கேமியோவாக தளபதி விஜய் இடம்பெறவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தளபதி ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அட்லி - ஷாருக்கான் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் ஷாருக்கான் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X