கடவுளே ஷாருக்கான் படத்தை நல்லா எடுக்கணும்.. முருகர் கோயிலுக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்த அட்லி!

சென்னை: கர்நாடகாவில் உள்ள முருகர் கோயிலில் இயக்குநர் அட்லி தனது மனைவி பிரியாவுடன் சமி தரிசனம் செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும், ரூ. 10 லட்சத்தை அந்த கோயிலுக்கு இயக்குநர் அட்லி நன்கொடையாக வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் படத்தை இயக்கப் போகிறார் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக்பஸ்டர் இயக்குநர்

பிளாக்பஸ்டர் இயக்குநர்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மாணவரான இயக்குநர் அட்லி பிளாக்பஸ்டர் இயக்குநராக மாறி உள்ளார். ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அவர் இயக்கிய அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.

டார்லிங் நயன்தாரா

டார்லிங் நயன்தாரா

இயக்குநர் அட்லிக்கு மிகவும் பிடித்த ஹீரோயின் என்றால் அது நம்ம லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான். அவரை எப்போதுமே டார்லிங் என்றே அழைப்பார். ராஜா ராணி படத்தில் நடிக்க வைத்து நயன்தாராவுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தார். பிகில் படத்தை தொடர்ந்து மீண்டும் நயனுடன் பணியாற்ற உள்ளார் அட்லி.

ஷாருக்கான் படம்

ஷாருக்கான் படம்

கோலிவுட்டில் வசூல் இயக்குநராக கலக்கி வரும் அட்லி அடுத்ததாக பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தை இயக்கப் போகிறார். பிகில் படத்தை முடித்து கடந்த 2 ஆண்டுகளாக ஷாருக்கான் படத்தை இயக்க காத்திருகிறார் அட்லி. ஷாருக்கானுக்கு ஹீரோயினாக நயன்தாராவையும் பாலிவுட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்.

சாமி தரிசனம்

சாமி தரிசனம்

இந்நிலையில், இயக்குநர் அட்லி தனது மனைவி பிரியாவுடன் கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணிய கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கோயிலுக்கு முன்பாக மனைவி மற்றும் நண்பர்களுடன் இயக்குநர் அட்லி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

10 லட்சம்

10 லட்சம்

மேலும், கர்நாடகாவில் உள்ள குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு இயக்குநர் அட்லி ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷாருக்கான் படம் ஓகே ஆன நிலையில், நேர்த்திக் கடனை செலுத்தி உள்ளார் அட்லி என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X