தெறி இந்தி ரீமேக்.. எப்போது ரிலீஸ் தெரியுமா? டைட்டிலை அதிரடியாக அறிவித்த அட்லீ!

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த தெறி திரைப்படம் இந்தியில் பேபி ஜான் என்கிற பெயரில் ரீ மேக்காகி வருகிறது. பிரியா அட்லீ தயாரிக்கும் இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் தளபதி விஜய்யை வைத்து பல வெற்றிப்படத்தை கொடுத்து தமிழ் ரசிகர்களை வளைத்துப்போட்டார். கோலிவுட்டில் தனது திறமையை நிரூபித்த அட்லீ பாலிவுட்டிலும் இன்று மாஸ் காட்டி வருகிறார். இவர் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகி கலெக்ஷனை அள்ளியது.

atlee announced theri hindi remake title and release date

தெறி ரீமேக்: ஜவான் படத்தின் மகத்தான வெற்றியால் பாலிவுட்டில் கடைவிரித்து இருக்கும் அட்லீ தற்போது தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், படத்திற்கான பூஜை கடந்த மாதம் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியில் ரீமேக்காக உள்ள தெறி ரீமேக்கிற்கு அட்லீ தான் தயாரிப்பாளர் இவரது தயாரிப்பில் ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவத் தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றன.

படம் எப்போது ரிலீஸ் தெரியுமா: பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காளீஸ் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான நடந்து வரும் நிலையில், படம் மே 31ந் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பேபி ஜான் என டைட்டில் வைக்கப்பட்ட வீடியோவையும், போஸ்டர் ஒன்றையும் அட்லீ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஹிட் படம்: விஜய் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான தெறி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த விஜய்யின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. விஜய்யின் திரைப்பயணத்தில் தெறி திரைப்படம் ஒரு மறக்க முடியாத படமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X