Atlee: விஜய் கொடுத்த ஷாக்... சல்மான் கானிடம் சரண்டர் ஆன அட்லீ... ஜவான் வரிசையில் அடுத்த மெஹா ஹிட்!

சென்னை: கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அட்லீக்கு மீண்டும் இந்தி திரையுலகில் இருந்து மெகா ஆஃபர் கிடைத்துள்ளது. விஜய் - ஷாருக்கான் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்காக கதை எழுதி வந்தார் அட்லீ. ஆனால், விஜய்யின் அரசியல் முடிவு காரணமாக இப்போது சல்மான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

சல்மான் கானிடம் சரண்டர் ஆன அட்லீ: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் கூட்டணி வைத்த அட்லீ, தனது 5வது படத்திலேயே பாலிவுட்டில் என்ட்ரியானார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானே அட்லீயை அழைத்து படம் இயக்க வாய்ப்புக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி உருவான ஜவான் திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.

 Atlee: Atlee and Salman Khan New Project Talks Going On

இதனால் பாலிவுட்டிலும் மோஸ்ட் வான்டட் இயக்குநராக வலம் வருகிறார் அட்லீ. ஜவான் வெளியானதும் விஜய் - ஷாருக்கான் நடிப்பில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனக் கூறியிருந்தார் அட்லீ. மேலும் அதற்காக கதை எழுதி வருவதாகவும் விரைவில் இக்கூட்டணியில் ஒரு படம் உருவாகும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்திருந்தார். ஆனால், விஜய் திடீரென சினிமாவில் இருந்து விலகி அரசியல் தான் இனி தனது பயணம் என அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனாலும் ஏற்கனவே கமிட்டான ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். அதன்படி விஜய் நடிப்பில் அவரது 69வது படம் மட்டும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. தளபதி 69 இயக்குநர் வரிசையில் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், ஹெச் வினோத், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் விஜய் அறிவிக்கும் போது தான் தளபதி 69 இயக்குநர் குறித்து தெரிய வரும்.

இதனிடையே அல்லு அர்ஜுனின் படத்தை இயக்கவுள்ள அட்லீ, விஜய்க்காக காத்திருக்காமல் மீண்டும் பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் வெளியான போதே சல்மான் கானும் அட்லீக்கு ஆஃபர் கொடுத்ததாக சொல்லப்பட்டது. அதன்படி தற்போது அட்லீ - சல்மான் கான் கூட்டணி கன்ஃபார்ம் ஆகிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான் கானை இரண்டு முறை சந்தித்து கதை கூறியுள்ளாராம் அட்லீ.

இந்த இரண்டு மீட்டிங்கும் எதிர்பார்த்ததை போலவே பாசிட்டிவாக அமைந்துள்ளதாம். இதனால் சீக்கிரமே அட்லீயின் படத்திற்காக சல்மான் கான் கால்ஷீட் கொடுப்பார் என்றே பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சல்மான் கான் நோ சொல்லிவிட்டால் பாலிவுட்டிலேயே இன்னொரு மாஸ் ஹீரோவை வைத்து அந்தப் படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம் அட்லீ. இதுகுறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X