Atlee: "விஜய்யும் ஷாருக்கானும் ரெடி.. அடுத்த ப்ராஜெக்ட் அது தான்..” அட்லீ கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்
சென்னை: அட்லீயின் முதல் பாலிவுட் படமான ஜவான் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூலித்தது.
ஷாருக்கான் ஹீரோவாக நடித்த இந்தப் படத்திற்கு பாலிவுட்டில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
முன்னதாக ஜவான் படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடித்ததாக சொல்லப்பட்டது.
அது உண்மை இல்லை என்றான நிலையில், விஜய், ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இயக்குவேன் என அட்லீ கன்ஃபார்ம் செய்துள்ளார்.

அட்லீயின் அடுத்த மாஸ்டர் பிளான்
ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநரான அட்லீ, தற்போது கோலிவுட், பாலிவுட் என இரண்டு பக்கமும் பிஸியாகிவிட்டார். விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லீ, தளபதியின் குட்புக்கில் இடம்பிடித்துவிட்டார். அதன் மூலம் அவருக்கு பாலிவுட்டில் ஷாருக்கானிடம் இருந்தும் அழைப்பு வந்தது. அதன்படி, அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் ஜவான் உருவானது.
கடந்த 4 ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்த ஜவான், செப்டம்பர் இறுதியில் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான ஜவான் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் முதல் 4 நாட்கள் தொடர்ச்சியாக 100 கோடி ரூபாய் வசூலை கடந்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை 1100 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது. அதேபோல் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் மாஸ் காட்டி வருகிறது.
இதனிடையே ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் விஜய்யும் நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. அட்லீ, ஷாருக்கான் இருவருக்காகவும் ஒரு ஃபைட் சீனில் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ஜவான் வெளியானதும் அதில் விஜய் நடிக்கவில்லை என்பது கன்ஃபார்ம் ஆனது. அதேநேரம் ஜவான் உருவாக விஜய்ண்ணா தான் காரணம் என அட்லீ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஜய் - ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்தை விரைவில் இயக்குவேன் என அட்லீ கூறியுள்ளார். அதாவது ஜவான் படப்பிடிப்பின் போதே, விஜய்யுடன் இணைந்து நடிக்க தயார் என ஷாருக்கான் கூறினார். அதேபோல் விஜய்ண்ணாவும் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க ரெடி என சொல்லிவிட்டார். அதனால் இருவருக்கும் ஏற்ற கதை எழுத ரெடியாகிவிட்டேன். அது எனது அடுத்த படமாக கூட இருக்கலாம் என அட்லீ சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
இதனால், விஜய் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். விஜய்யும் ஷாருக்கானும் இணைந்தால் அந்தப் படம் வேற லெவலில் சம்பவம் செய்யும் என திரையுலகமும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. அட்லீ சொன்னது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











