Atlee: "பாலிவுட் போனாலும் பேசுறது தமிழ் தான்..” இந்தியில் வந்த கேள்வி... தக் லைஃப் கொடுத்த அட்லீ
மும்பை: ஜவான் படத்தின் வெற்றிக்குப் பின்னர் பாலிவுட்டில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் அட்லீ. ஷாருக்கானுடன் இணைந்து ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கொடுத்த அட்லீக்கு சல்மான் கான் தனது படத்தை இயக்க அழைப்பு விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியில் வந்த கேள்விக்கு தமிழில் தக் லைஃப் கொடுத்த அட்லீயின் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழில் தக் லைஃப் கொடுத்த அட்லீ
ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்த அட்லீ, அடுத்து விஜய்யுடன் இணைந்தார். அதன்படி அட்லீ - விஜய் கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல், பிகில் படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இதனால் தமிழில் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக வலம் வந்த அட்லீக்கு பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான் ஆஃபர் கொடுத்தார்.

இதனையடுத்து முதன்முறையாக இந்தி திரையுலகம் சென்ற அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இதனிடையே கடந்த வாரம் நடைபெற்ற தாதா சாகேப் பால்கே விருது விழாவில், ஜவான் படத்துக்காக அட்லீ, நயன்தாரா, அனிருத் ஆகியோருக்கும் விருது கிடைத்தது.
இந்நிலையில் ஜவான் படத்தின் வெற்றியால் அட்லீக்கு தொடர்ந்து பாலிவுட் முன்னணி ஹீரோக்களிடம் இருந்து அழைப்புகள் செல்வதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக சல்மான் கானின் புதிய படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி இன்னும் அபிஸியல் அப்டேட் ஏதும் வெளியாகவில்லை. இதனிடையே அட்லீ தற்போதெல்லாம் அடிக்கடி மும்பை சென்று வருவது வழக்கமாகி விட்டது.
அதன்படி சமீபத்தில் மும்பை சென்றிருந்த அட்லீ, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரை நேர்காணல் செய்த பெண் தொகுப்பாளர், வேண்டுமென்றே அட்லீயிடம் இந்தியில் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கெல்லாம் அசராத அட்லீ, 'நான் நல்லா இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க..' என தமிழில் பதில் சொல்ல அப்போது அரங்கமே அதிரத் தொடங்கியது.
பாலிவுட் சென்று சூப்பர் ஹிட் கொடுத்தாலும் இந்தியில் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை என கெத்தாக வலம் வருகிறார் அட்லீ. பொதுவாக இவரது படங்கள் கதை திருட்டு அல்லது காப்பி கட் சிக்கல்களில் ட்ரோல் ஆனாலும், அரசியல் ரீதியாக சில நுட்பமான காட்சிகளை வைத்து ஸ்கோர் செய்துவிடுவார். பிகில் படத்தில் கூட ஜாக்கி ஷெராப்பை விஜய்யின் ராயப்பன் கேரக்டர் அடிக்கும் காட்சியை உதாரணமாக கூறலாம். தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்ட அட்லீ, மும்பையில் சென்று தக் லைஃப் கொடுத்துள்ள வீடியோ ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











