Atlee: ஷாருக்கான் மூலம் கமலுக்கு ஆஃபர் கொடுத்த அட்லீ... அசால்ட்டாக டீல் செய்த உலக நாயகன்!!
சென்னை: ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ
தமிழில் 4 படங்கள் மட்டுமே இயக்கிய அட்லீ, தற்போது ஷாருக்கானின் ஜவான் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஷாருக்கானின் ஜவான் சூப்பர் ஹிட்டாகியுள்ளதால், அட்லீக்கு அடுத்தடுத்து அதிக வாய்ப்புகள் வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அவர் கமல்ஹாசனுக்கே ஆஃபர் கொடுத்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அட்லீயின் உலகநாயகன் கணக்கு: டைரக்டர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து இயக்குநரானவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜா ராணி மூலம் இயக்குநரான அட்லீ, முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் விஜய்யுடன் இணைந்த அட்லீ, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று படங்களை சூப்பர் ஹிட்டாக்கினார். இதனால் அவருக்கு பாலிவுட்டில் இருந்து தரமான ஜாக்பாட் அடித்தது.
அதன்படி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்த அட்லீ, ஜவான் படத்தை இயக்கினார். இந்த மாதம் 7ம் தேதி வெளியான ஜவான், பாக்ஸ் ஆபிஸில் 800 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது. அதுமட்டும் இல்லாமல், விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் க்ளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் படம் ஆயிரம் கோடி வசூலித்துவிட்டால், இந்த சாதனைக்குச் சொந்தமான முதல் கோலிவுட் இயக்குநர் என்ற பெருமை அட்லீக்கு கிடைக்கும்.
இதனால், அவரை வளைத்துப் போட கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்கள் ரெடியாக காத்திருக்கின்றனர். இதனிடையே அட்லீயின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் ஷாருக்கான் - விஜய் இருவரையும் ஒரு படத்தில் நடிக்க வைப்பேன் என்று அட்லீ சூளுரைத்துள்ளார். இந்த பரபரப்புக்கு நடுவில், மீண்டும் அட்லீக்கு ஆஃபர் கொடுத்துள்ளார் ஷாருக்கான்.

ஆனால், அட்லீக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் உலக நாயகனை இயக்க வேண்டும் என ஒரு பிளான் இருக்கிறதாம். இதனால் ஷாருக்கானை வைத்தே கமல்ஹாசனுக்கு ஆஃபர் கொடுத்துள்ளாராம் அட்லீ. கமல்ஹாசன் - ஷாருக்கான் இருவரும் ஹேராம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது முதலே இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால், ஷாருக்கான் மூலம் மூவ் செய்தால் கமல்ஹாசன் ஓக்கே கூறிவிடுவார் என அட்லீ எதிர்பார்த்திருந்தார். ஆனால், இந்தியன் 2, கல்கி படங்களில் பிஸியாக நடித்து வரும் கமல், அடுத்து ஹெச் வினோத், மணிரத்னம் படங்களிலும் கமிட்டாகியுள்ளார். இதுதவிர விக்ரம் 2ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் காரணம் காட்டி, ஷாருக்கான் மூலம் அட்லீ கொடுத்த ஆஃபருக்கு நோ சொல்லிவிட்டாராம் கமல்.


Click it and Unblock the Notifications











