Atlee: மீண்டும் பாலிவுட்டில் என்ட்ரி... அமிதாப் பச்சனுக்காக குடும்பத்துடன் மும்பை பறந்த அட்லீ!

மும்பை: ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட் சென்றார் அட்லீ. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற நிலையி, தற்போது அமீதாப் பச்சனுக்காக மீண்டும் மும்பை பறந்துள்ளார் அட்லீ.

atlee-atlee-priya-at-amitabh-bhachchan-s-grandson-agastya-nanda-s-debut-film-the-archies-premiere

மீண்டும் பாலிவுட்டில் அட்லீ
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் திரைப்படங்கள் மூலம் கோலிவுட்டில் மாஸ் காட்டினார் இயக்குநர் அட்லீ. விஜய்யுடன் தொடர்ந்து 3 படங்களில் இணைந்ததால் ஒட்டுமொத்த திரையுலகமும் அட்லீயை திரும்பிப் பார்த்தது. அடுத்த அதிரடியாக பாலிவுட் சென்ற அட்லீ, இந்தியில் முதல் படத்திலேயே ஷாருக்கானுடன் இணைந்தார்.

அதன்படி, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்த ஜவான், செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த ஜவான், ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதனால் பாலிவுட்டிலும் அட்லீயின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது. முன்னதாக ஜவான் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே மும்பையில் வீடு வாங்கினார் அட்லீ.

இதனால் தொடர்ந்து பாலிவுட்டில் படங்கள் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையி, அட்லீயும் அவரது மனைவி ப்ரியாவும் மும்பை சென்றுள்ளனர். அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா ஹீரோவாக நடித்துள்ள தி ஆர்ச்சீஸ் திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. ஜோயா அக்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர், ஷாருக்கான் மகள் சுஹானா கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாலிவுட் திரை நட்சத்திரங்களின் வாரிசுகள் நடித்துள்ள தி ஆர்ச்சிஸ் படத்தின் ப்ரீமியர் ஷோ மும்பையில் திரையிடப்பட்டது. அதனை பார்க்க அட்லீக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அட்லீயும் அவரது மனைவி ப்ரியாவும் மும்பை சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.

சமீபத்தில் தான் விஜய் - ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்திற்காக கதை எழுதி வருவதாக கூறியிருந்தார் அட்லீ. இதுவே தனது அடுத்தப் படமாக இருக்கும் என அட்லீ ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனால் விரைவில் விஜய் - ஷாருக்கான் - அட்லீ கூட்டணி குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X