Atlee: சொன்னபடி ஹாலிவுட்டில் என்ட்ரியாகும் அட்லீ... ஜவான் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

சென்னை: ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இதன் மூலம் சொன்னபடி ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் இயக்குநர் அட்லீ.

Atlee: Atlees Jawan has made it to the Hollywood Creative Alliance 2024 award list

ஹாலிவுட்டில் என்ட்ரியாகும் அட்லீ
ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. மணிரத்னத்தின் மெளன ராகம் படத்தின் கலர் ஜெராக்ஸ் என அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது அட்லீயின் ராஜா ராணி. ஆனாலும், ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் ஆகியோரை வைத்து இந்தப் படத்தை கலர்ஃபுல்லாக இயக்கியிருந்தார் அட்லீ. இதனையடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கினார்.

விஜய்க்கு தொடர்ந்து 3 சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த அட்லீக்கு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் இருந்து அழைப்பு வந்தது. அதன்படி முதன்முறையாக பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. ராஜா ராணி தொடர்ந்து ஜவான் வரை அட்லீ மற்ற படங்களின் கதைகளை திருடுவதாக ட்ரோல் செய்யப்பட்டன.

ஆனால், அதற்கெல்லாம் அசராத அட்லீ, ஜவான் படத்தை சூப்பர் ஹிட்டாக்கினார். பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியான ஜவான், பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதன்மூலம் முதல் ஆயிரம் கோடி கலெக்‌ஷன் கொடுத்த தமிழ் இயக்குநர் என்ற பெருமையை அட்லீ தனதாக்கினார். இதனால் பாலிவுட்டிலும் அட்லீயின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது.

ஜவான் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்துக்கு கதை எழுதி வருவதாக அட்லீ அப்டேட் கொடுத்திருந்தார். முன்னதாக சென்னையில் நடைபெற்ற ஜவான் இசை வெளியீட்டு விழாவில், ஹாலிவுட்டில் இருந்து தனக்கு அழைப்பு வந்துள்ளதாகக் கூறி ரசிகர்களை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்தார். கண்டிப்பாக ஹாலிவுட்டில் படம் இயக்குவேன் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அட்லீ ஜவான் படம் மூலம் ஹாலிவுட்டில் என்ட்ரியாகியுள்ள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம், ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 விருது பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயக்குநர் அட்லீ, ஷாருக்கான் உட்பட மொத்த ஜவான் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X