»   »  'அந்த' சம்பவத்திற்கு பிறகு விஜய் 61 செட்டில் செல்போனுக்கு தடா போட்ட அட்லீ

'அந்த' சம்பவத்திற்கு பிறகு விஜய் 61 செட்டில் செல்போனுக்கு தடா போட்ட அட்லீ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 61 படப்பிடிப்பு தளத்தில் செல்போன் பயன்படுத்த தடை போட்டுள்ளாராம் இயக்குனர் அட்லீ.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய் 61. இந்த படத்தில் விஜய் அப்பா மற்றும் 2 மகன்கள் என்று மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம்.

அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.

நித்யா

நித்யா

அப்பா விஜய், நித்யா மேனன் வரும் காட்சிகளை அட்லீ படமாக்கிவிட்டார். படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் அட்லீயை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாடல்

பாடல்

படப்பிடிப்பை ஓபனிங் பாடலோடு துவங்கியுள்ளனர். பாடல் காட்சியில் அப்பா விஜய் டான்ஸ் ஆடியுள்ளார். அப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஜூனியர் ஆர்டிஸ்டுகள் தங்கள் செல்போனில் பாடலை பதிவு செய்துள்ளார்கள்.

கசிவு

கசிவு

பாடல் செல்போனில் பதிவு செய்யப்பட்டதை அறிந்த அட்லீ கடுப்பாகி அனைத்து ஜூனியர் ஆர்டிஸ்டுகளையும் வெறியேற்றிவிட்டு ஷூட்டிங்கை நடத்தினாராம்.

செல்போன்

செல்போன்

பாடல் காட்சியில் நடந்த சம்பவத்தை அடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்போனுக்கு தடை போட்டுள்ளாராம் அட்லீ. சில விஷமிகள் விஜய் நடிக்கும் காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டால் என்ன செய்வது என்று உஷாராக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாராம் அட்லீ.

English summary
Director Atlee has banned cellphones at the sets of Vijay 61 after some junior artistes recorded a song in their mobiles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil