எந்திரன் ரஜினியான அட்லி.. திருமண நாளில் செய்த அலப்பறையை பாருங்க!

Recommended Video

Atlee Priya Wedding Anniversary: அட்லீ பிரியாவின் ஐந்தாம் ஆண்டு திருமண நாள்

சென்னை: இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா, நேற்று தங்களது ஐந்தாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் வெளியான விஜய்யின் பிகில் படம் 300 கோடியை நெருங்கவுள்ள நிலையில், இத்தாலியில் திருமண நாளை மனைவியுடன் கொண்டாடி வருகிறார் அட்லி.

அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை அட்லி இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம்

திருமணம்

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அட்லி. முதல் படத்தை இயக்கி வெற்றி பெற்ற நிலையில், 2014ம் ஆண்டு, நவம்பர் 9ம் தேதி தனது காதலியான நடிகை கிருஷ்ண பிரியாவை அட்லி திருமணம் செய்து கொண்டார்.

ஹிட் இயக்குநர்

ஹிட் இயக்குநர்

அட்லி இயக்கத்தில் வெளியான ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 4 படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இதனால், கோலிவுட்டில் ஹிட் இயக்குநராக வலம் வருகிறார் அட்லி.

ட்ரோல்

ட்ரோல்

பொதுவாக சில இயக்குநர்கள் ஹாலிவுட் படங்களை காப்பியடித்து தமிழில் படங்களை இயக்குவார்கள். ஆனால், அட்லி, தமிழ் படங்களையே காப்பி அடித்து படம் இயக்குகிறார் என்று வேறு எந்த இயக்குநரை செய்யாத அளவுக்கு அதிகளவு ட்ரோலுக்கு உள்ளான இயக்குநர் என்றால் அது அட்லி தான். மேலும், ஐபிஎல் போட்டியின் போது, ஷாருக்கானுடன் அட்லி அமர்ந்திருந்த புகைப்படத்தை போட்டு, அவரது நிறம் குறித்தும் அநாகரிமாக ட்ரோல் செய்திருந்தனர்.

எந்திரன் ரஜினி

ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் விஞ்ஞானி வசீகரனாக ரஜினி நடித்திருப்பார். ஐஸ்வர்யா ராயிடம் ரொமான்ஸ் செய்யும் போது அவர் கொடுத்த முத்தங்களுக்கு கணக்கு வைத்திருப்பார். அதே போல, தற்போது 5ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வரும் அட்லி, தனது தோழி மற்றும் மனைவி பிரியாவுடன் 43,823 மணி நேரத்தை ஒன்றாக கழித்துள்ளதாகவும், மேலும் பல ஆண்டுகள் இதே போன்று சந்தோஷமுடன் வாழவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X