நயன்தாரா கூட இப்படி பண்ணலையே.. கீர்த்தி சுரேஷுக்கு எவ்ளோ பெரிய மனசு!.. மச்சி அட்லீ.. அதுதான் காரணமா?
சென்னை: ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ரிலீசை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் பரந்த மனதுடன் வாழ்த்தி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், இயக்குனர் அட்லீயை மச்சி என அழைத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஜவான் படத்தின் ஹீரோயின் நடிகை நயன்தாரா கூட ஜவான் டிரைலர் ரிலீஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அதன் பின்னர் எந்த ஒரு புரமோஷன் படத்தின் ரிலீஸை முன்னிட்டு செய்யவில்லை.

ஜவான் படத்துக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து: இந்நிலையில் இதுவரை அட்லி இயக்கத்தில் நடிக்காத நடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு புகைப்படம் வெளியிட்டு வாழ்த்தியுள்ளாரே என்ன விஷயம் என்று பார்த்த ரசிகர்களுக்கு அட்லி தயாரிப்பில் அடுத்ததாக ஹிந்தியில் வெளியாக உள்ள தெறி படத்தின் ரீமேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் காரணமாகவே இயக்குனர் அட்லி மற்றும் பிரியா அட்லீ உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ஜவான் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள போட்டோவையும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு ஜவான் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைய வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ்: இயக்குனர் அட்லியின் உதவி இயக்குனர் கலீஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் தமிழில் விஜயுடன் நடிகை சமந்தா நடித்த பிளாஷ்பேக் போர்ஷனில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை நயன்தாராவை டார்லிங் என செல்லமாக இயக்குனர் அட்லி அழைத்து வரும் நிலையில், இயக்குனர் அட்லியை செல்லமாக நடிகை கீர்த்தி சுரேஷ் மச்சி என அழைத்து வருவது தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் தெரிய வருகிறது.
மகேஷ் பாபுவும் வாழ்த்தினார்: நடிகை கீர்த்தி சுரேஷ் மட்டுமின்றி முன்னதாக இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்த வேண்டும் என டோலிவுட்டின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது வீட்டைப் பார்த்து ஹேப்பியான ஷாருக்கான் உங்களுடன் சேர்ந்து ஜவான் படத்தை பார்க்க இருக்கிறேன் என நன்றி தெரிவித்திருந்தார்.
ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் நிகழ்த்திய பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் சாதனையை ஜவான் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











