ஆசிரியர் தின வாழ்த்தை கூடவா காப்பியடிப்பீங்க அட்லி: சிரிப்பாய் சிரிக்கும் ட்விட்டர்
சென்னை: ஆசிரியர் தின வாழ்த்தை கூடவா காப்பியடிப்பீங்க அட்லி என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பல படங்களின் கதையை உருவி ஒரு கலக்கு கலக்கி தன் கதை போன்று படம் எடுப்பவர் அட்லி என்று கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் ஆசிரியர் தின வாழ்த்தை கூட காப்பியடித்து வசமாக சிக்கியுள்ளார் அட்லி.
வாழ்த்து
ஆசிரியர் தினம் ஆண்டுக்கு ஒரு முறை வந்தாலும், உங்களின் போதனைகள் எனக்கு தினமும் உதவுகிறது. அதற்காக நான் உங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன். ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார் என்று தனக்கு தொழில் கற்றுக் கொடுத்த இயக்குனர் ஷங்கருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அட்லி.
ஆசிரியர் தினம்
அடடே, அட்லி தனது குருவுக்கு என்ன அழகாக வாழ்த்து கூறியுள்ளார் என்று நினைத்தால் அதை கூட வேறு ஒரு இடத்தில் காப்பி செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேஸ்ட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடப் போங்க அட்லி. அட்லி அந்த வாசகத்தை இங்கிருந்து தான் சுட்டுள்ளார்.
கிண்டல்
இதை கூடவா காப்பியடிப்பீங்க அட்லி என்று நெட்டிசன்கள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள். காப்பியடிப்பது என்று முடிவு செய்த பிறகு அப்படியேவா காப்பியடிப்பீங்க. லைட்டா மாற்றம் செய்திருக்கலாம். இப்படி வசமா மாட்டியிருக்க வேண்டாம்ல.
சுட்டுட்டார்
சமூக வலைதளங்களில் அட்லியை மரண கலாய் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அட, நல்லா இருக்கேன்னு எடுத்திருப்பார். இப்படி இந்த பயபுள்ளைக கண்டுபிடிக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.


Click it and Unblock the Notifications











