மீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி?: என்ன கதை சார்?
சென்னை: விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் விஜய் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற பேச்சு கிளம்பியது.
வெற்றிமாறன், வினோத், மோகன் ராஜா, அட்லி ஆகியோரில் யாராவது ஒருவருக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது.

அட்லி
விஜய் 63 படத்தை இயக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட அட்லிக்கு கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்கார் படத்தை முடித்த பிறகு விஜய் மீண்டும் அட்லியுடன் சேர்ந்து பணியாற்ற உள்ளாராம்.

விஜய் 63
விஜய்யும், அட்லியும் ஏற்கனவே தெறி, மெர்சல் ஆகிய வெற்றிப் படங்களை அளித்துள்ளனர். அவர்கள் மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மீம்ஸ்
விஜய், அட்லி மீண்டும் கூட்டணி சேர்வதை பார்த்து மீம்ஸ் போடத் துவங்கிவிட்டனர். நீ கதை எல்லாம் சொல்ல வேண்டாம், படத்தின் பெயரை சொல் நான் நிச்சயம் அதை பார்த்திருப்பேன் என்று விஜய் அட்லியிடம் சொல்வதாக சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

மகிழ்ச்சி
கலாய்ப்பவர்கள் கலாய்த்தாலும் விஜய், அட்லி மீண்டும் கூட்டணி சேர்வது குறித்து அறிந்து தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தளபதிக்கு இன்னொரு ஹிட் கிடைக்கப் போகிறது என்று மகிழ்கிறார்கள்.

ஹீரோயின்
அட்லி நீங்கள் விஜய்யை மீண்டும் இயக்குவது உண்மை என்றால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த படத்திலாவது ஹீரோயினை சாகடிக்காமல் வாழ வைத்துக் காட்டுங்கள்.


Click it and Unblock the Notifications











