Atlee: “இனி அட்லீ இல்ல... காப்பி பேஸ்ட் இயக்குநர் தட்லீ..” அடியே படத்தில் பங்கம் செய்த ஜிவி பிரகாஷ்
சென்னை: ஜிவி பிரகாஷ் நடித்துள்ள அடியே திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் காமெடி படமாக உருவாகியுள்ள ஜவான், இந்த வாரத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அடியே படத்தின் ஒரு காட்சியில் இயக்குநர் அட்லீயை, தட்லீ என பெயர் மாற்றி அவரது படங்களை ட்ரோல் செய்துள்ளது வைரலாகி வருகிறது.
ஷாருக்கனை வைத்து அட்லீ இயக்கியுள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நேரத்தில், அவரை ட்ரோல் செய்துள்ளது நெட்டிசன்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது.
அட்லீயை தட்லீயாக மாற்றிய ஜிவி பிரகாஷ்: கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ், படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்தாண்டு அவரது நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அடியே திரைப்படம் இன்று வெளியானது. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம், சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் செம்ம காமெடியாக உருவாகியுள்ளது. Reality Vs Alternative Reality என்பது தான் இப்படத்தின் கான்செப்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷுடன் கெளரி ஜி கிஷன், வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். ரியாலிட்டியான உலகில் இருந்து Alternative Reality யுனிவர்ஸில் சிக்கிக் கொள்ளும் ஜிவி பிரகாஷ், தனது காதலில் வெற்றிப் பெற்றாரா என்பது தான் கதை. சயின்ஸ் பிக்ஷன் ப்ளஸ் காமெடி ஜானரில், ஒரு காதல் கதையை சொல்லி ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.
அதேநேரம் படம் முழுவதும் வரும் காமெடி காட்சிகள் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கிறது. ரியாலிட்டியில் இருக்கும் பிரபலங்கள் Alternative Reality-யில் வேறொரு துறையில் பிரபலமாக இருப்பதாக சித்தரிக்கும் இடங்கள் புதுமையாக உள்ளது. பிரபுதேவா ஏஆர் ரஹ்மானாக மாறுகிறார், ஏஆர் ரஹ்மான் டான்ஸ் மாஸ்டர், இயக்குநர் மணிரத்னம் கிரிக்கெட் ப்ளேயர், சச்சின் ஃபுட்பால் ப்ளேயர், அஜித் ஃபார்முலா ஒன் ரேஸர், கேப்டன் விஜயகாந்த் இந்திய பிரதமர் என செம்ம மாஸ் காட்டியிருக்கிறார்கள்.
முக்கியமாக இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் அட்லீயை பங்கமாக கலாய்த்துள்ளனர். Alternative Reality-யில் இசையமைப்பாளர் அர்ஜுனாக வருகிறார் ஜிவி பிரகாஷ். அப்போது தெறி படத்தில் விஜய்யிடம் சமந்தா பேசிய வசனத்தை, அப்படியே ஜிவி பிரகாஷிடம் பேசுகிறார் கெளரி ஜி கிஷன். இந்த வசனம் ரியாலிட்டி உலகில் எந்தப் படத்தில் வரும் என கூகுளில் தேடும் ஜிவி பிரகாஷ், அட்லீ என்பதற்கு பதிலாக 'இயக்குநர் தட்லீயின் படங்கள்' என டைப் செய்வார்.
அதன்படி கூகுள் ரிசல்ட்டில் மெளன ராகம் (ராஜா ராணி), சத்ரியன் (தெறி), அபூர்வ சகோதரர்கள் (மெர்சல்), சக்தே இந்தியா (பிகில்) என வரும் காட்சி ரசிகர்களை வெடித்து சிரிக்க வைக்கிறது. அதாவது மெளன ராகம், சத்ரியன், அபூர்வ சகோதரர்கள், சக்தே இந்தியா படங்களை காப்பி செய்துதான் அட்லீ தனது படங்களை இயக்கியதாக நேரடியாகவே அவரை ட்ரோல் செய்துள்ளனர். இந்த சீன் படத்துடன் பார்க்கும் போது செம்ம காமெடியாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது.
அட்லீயின் படங்கள் எப்போதுமே கதை சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், தற்போது அவர் இயக்கியுள்ளா ஜவான் படத்துக்கு அதிகம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜவான், செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லரும் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படியான நிலையில், அட்லீயை தட்லீயாக மாற்றி ட்ரோல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











